பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனை வாங்கி உள்ளார்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,22ல் பிரமாண்டமாய் நடந்தது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரதமர் முதல் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர். அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பின் அந்த ஊரும் வேகமாக வளர்ந்து வருகிறது.உலகமே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குபின், வர்த்தக ரீதியாகவும், தொழில் நகரகமாக மாறி வருகிறது. இதனால் முதலீடுகளும் அதிகமாகி வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் ரூ.14.50 கோடி மதிப்புள்ள வீட்டுமனை வாங்கி உள்ளார்.
0
Leave a Reply