2023-ல் 2 வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகை
.மலையாளத்தில்2017ம் ஆண்டு வெளியாக கேர் ஆஃப் சாய்ரா பானு என்ற 2023ம் ஆண்டு சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற இரண்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன்.அதே ஆண்டு பகத் பாசிலுடன் இவர் நடித்த தொண்டி முதலும் த்ர்காக்ஷியம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.அடுத்து இடா, ஒரு கர்புரசிதா பையன், சோலா, தி கிரேட் இன்டியன் கிச்சன், நயட்டு, மாலிக் எனபல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிமிஷா சஜயன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.சித்தார்த் நாயகனாக நடித்து அவரே தயாரித்த இந்த படத்தை, அருண்குமார் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா2 படத்தில் மலையரசி என்ற கேரக்டரில் சிறப்பான நடித்திருந்தார் நிமிஷா சஜயன்.காடுகளின் வாழும் பழக்குடியின மக்கள், மற்றும் காட்டு யானைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படத்தில் லாரன்சின் மனைவியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார்.
தமிழில் நடித்த இரு படங்களுக்குமே நிமிஷா சஜயனுக்கு வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அடுத்து அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள மிஷன் சாப்டர்1 படத்தில் நடித்துள்ளார்,சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிமிஷா சஜயன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
0
Leave a Reply