25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


.அக்டோபர் 1 ஆம் தேதி 'தூய்மை இந்தியா'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.அக்டோபர் 1 ஆம் தேதி 'தூய்மை இந்தியா'

மக்களில் பலர் வசதியாக இருந்தாலும் தூய்மையாக இல்லாததால் தொற்று நோய்களுக்கு ஆட்படுகின்றனர். அதனால், பொது இடங்களில் புகை பிடித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், கழிப்பறை செல்லுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள பகுதி அசுத்தமாக அமைந்து அதனால் நோய் கிருமிகள் உருவாகும். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திட்டமான“தூய்மை இந்தியா” என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு“தூய்மை பாரதம்” என்ற பொது இடங்களை தூய்மை செய்யும் செயல் திட்டத்தை பாரதப் பிரதமர் நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும், வீடுகளிலும், காடுகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் அனைத்து மக்களும் தாமே இத்திட்டத்தை செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.அதன் விரிவாக்கமாக கிராமப்புற வீடுகளில் கழிவறை, கிராமத்திற்கான பொது கழிவறை, நகர்ப்புறங்களில் கழிப்பறைகள்,பள்ளி கல்லூரிகளில் கழிப்பறைகள், பெண்களுக்கான தூய்மை பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டியது கடமையாகும்.

  • நாம் வசிக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளில் சுத்தமாக வாழ வழிவகை செய்தல்.
  • விலங்கினங்களை  துன்புறுத்தாமலும் அதை இறைச்சிக்காக பயன்படுத்தாமலும் இருக்க நாம் அனைவரும் முன் வரவேண்டும்.
  • காடுகளில் மரத்தையும் விலங்கினங்களையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
  • பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும்.
  • மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பெருக்க வீட்டுக்கு ஒரு நீர்த்தொட்டி அமைக்க வேண்டும்.
  • வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். மாடித் தோட்டங்கள் அமைக்க வேண்டும்.
  • வீடுகளில் சமையலறைகளை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும்.
  • அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழக் கற்றுக் கொள்ளவும். படிப்பறிவு இல்லாத மக்களுக்கு படித்தவர்கள் கல்வியறிவு புகட்டி அவர்களை முன்னேற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.
  • அரசுப் பொது சொத்துகளை சேதம் விளைவிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • அனைவரும் அவரவர் பணிகளை கன்னியமாக செய்து முடிக்க வேண்டும்.
  • வசதி படைத்தோர்கள் வசதியில்லாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒரு நல்ல செயலைத் தொடங்க எப்போதும் தயாராக இருக்கும் நம் இளைஞர்களின் துணையோடு ஒரு மாபெரும் தேசியத் தூய்மைத் திட்டத்தை நாமும் மேற்கொண்டு தூய்மையான இந்தியாவை உருவாக்கிக் காப்போம்.அக்டோபர் 1 ஆம் தேதி 'தூய்மை இந்தியா' வை செயல்படுத்த இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே திட்டத்தின் படி நம் வீட்டருகில் உள்ள குப்பையை அகற்றி சுத்தம் செய்வோம் காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை நாம் ஒவ்வொருவரும் அருகில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News