சந்திரமுகி 2
சந்திரமுகி 2 - இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரென்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளரான சுபாஷ்கரன் தனது லைக்கா புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.திகில் - திரில்லர் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரென்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சுபிக்ஸா, சுரேஷ் சந்திரா மேனன், வடிவேலு என பல தமிழ் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சி கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் அதே அரண்மனையில் சந்திரமுகி மீண்டும் வர இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.முதல் பாகத்தின் முடிவை தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) குடும்பத்தில் தொடர்ந்து அசம்பாவித சம்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த குடும்பத்துடன் வேட்டைய புரத்துக்கு வரும் ராதிகா சரத்குமார் தனது பெரிய குடும்பத்தினர் தங்க சந்திரமுகி பங்களாவுக்கு வருகின்றனர்.
அந்த பங்களாவில் உள்ள அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, ரியல் சந்திரமுகியே இந்த முறை இறங்கி வருவதும் அதனை அடக்க வேட்டையன் (ராகவா லாரென்ஸ்) வருகிறார். பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை.இப்படம் 2023 விநாயகர் சதுர்த்தி-க்கு ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்படம் செப் 28ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.வடிவேலு நடித்துள்ள முருகேசன் கதாபத்திரம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்திலும் உருவாகியுள்ளது. நகைச்சுவை - திகில் - திரில்லர் என இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் திரைக்கதையில் உருவாகியுள்ளது.
0
Leave a Reply