அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக துவங்கிரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்திற்கு பிறகு கடந்த பத்து மாதங்களாக அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மறுபக்கம் விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிவந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்புஅஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாமல் இருந்தது.இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பிற்காக ஆவலாக,காத்துக்கொண்டிருந்தனர்..விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக நடக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வந்த பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அஜித், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.விடாமுயற்சி படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
0
Leave a Reply