ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குருப் கேப்டன் டி.கே.பருல்கார் காலமானார் .
ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குருப் கேப்டன் டி.கே.பருல்கார் காலமானார். 1965 இந்திய பாகிஸ்தான் போரின் போது, இவர் ஒட்டிய விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. விமானத்தை விட்டு விட்டு அங்கிருந்து புறப்படுமாறு உயர் அதிகாரிகள் கூறினாலும், அந்த விமானத்துடன் நாட்டிற்கு திரும்பி வந்த தீரன் இவர். அதேபோல் 1971 பாகிஸ்தான் போரின் போது, போர் கைதியாக இவர் பிடிபட்டார். ஆனால் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்தடைந்தார். இந்த உன்னத வீரருக்கு வீர வணக்கம்.
0
Leave a Reply