பெண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் அன்கிதா ரெய்னா, ருடுஜா போசாலே சிறப்பாக செயல் பட்ட இந்திய ஜோடி .
பெண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர், சீனாவில் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ருடுஜா போசாலே ஜோடி, தென் கொரியாவின் நாரி கிம், சீனாவின் செங்இயி யுவான் ஜோடியை எதிர் கொண்டது. துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல் பட்ட இந்திய ஜோடி, இரு செட்டுகளையும் எளிதாக வசப்படுத்தி,.ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் ரியா பாட்யா, சீனா வின் ஜின்யு காவோவை பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ,முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ரியா, அடுத்த செட்டை 1-6 என நழுவவிட்டார்.
ரியா 6-3 என வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது, கடைசி செட்டை வென்றார். ஒரு மணி நேரம், 57 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ரியா, 6-4,1–6, 6-3 என வெற்றி பெற்றார்.
0
Leave a Reply