கபடி லீக் 12வது சீசன் டில்லி அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், டில்லி அணிகள் மோதின. இதில் டில்லி அணி 33-29 என வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு நீரஜ் நார்வல் (9 புள்ளி) கைகொடுத்தார். தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் கேப்டன் விஜய் மாலிக் 5 புள்ளி பெற்றார்.இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்ற டில்லி அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது
0
Leave a Reply