25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் வென்றது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் வென்றது .

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 21, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை 57 கிலோ பிரிவு பைனலில் எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் ஜாஸ்மின். மூன்று சுற்று முடிவில், 5 நடுவர்களில் 4 பேர் ஜாஸ்மினுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.முடிவில் ஜாஸ்மின் 4-1  என (30-27, 29-28, 28-29-29-28) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றி, உலக சாம்பியன் ஆனார்.

இந்தியாவின் மீனாட்சி ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் நஜிம் கைஜய்பேவை ,பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பைனலில் எதிர்கொண்டார். இதில் மீனாட்சி, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, புதிய சாம்பியன் ஆனார்.

இந்தியாவின் நுபுர் ஷியோரன், போலந்தில் அகட்டாவை  பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு பைனலில் சந்தித்தார். இதில் சமமான போட்டியை வெளிப்படுத்தியபோதும், நுபுர் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

இந்தியாவின் பூஜா, பாரிசின் எமிலி அஸ்குய்த்தை80 கிலோ பிரிவு அரை யிறுதியில் ,பூஜா 1-4 என தோல்வியடைந்து, வெண்கலம் கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News