25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


லிச்சி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லிச்சி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

லிச்சி பழத்தில் வைட்டமின் சி, பி6, நியாசின், ரிபோபிளவின், போலேட், பொட்டாஷியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், நார்ச்சத்து, புரதம், 'பாலிபீனாலிக்' கூறுகளும் அதிக அளவில் உள்ளன.

லிச்சி பழத்தில், நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானப் பிரச்னைகளை போக்கும் தன்மையுடையது. சிறந்த செரிமானத்தின் மூலம்,குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது.

லிச்சியில் உள்ள வைட்டமின் சி, சிறந்த ஆக்ஸிஜனேற்றி ஆகவும், வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்கவும், கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகிறது. இதனால், புற்றுநோய், இதயநோய், விரைவான வயது மூப்பு போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம்.

லிச்சியில்,'பொட்டாஷியம்' அதிகமாககாணப்படுகிறது.அதனால், உடலில்நீர்சக்தியைசமன் செய்கிறது.உலர்ந்தலிச்சியின்,'பொட்டாஷியம்' அளவு, 'பிரஷ்' லிச்சியை விட, மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

லிச்சி பழத்தில்தாமிரம்அதிகஅளவுகாணப்படுகிறது.சிவப்புஅணுக்களின்உற்பத்தியில், பொதுவாகஇரும்புசத்துக்களுடன், தாமிரமும்இணைந்திருக்கும். இதனால், லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் புத்துணர்ச்சி அடையும்.

மேலும், உடல் உறுப்புகளுக்கும், செல்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்க பெறும்.லிச்சியில், சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள், குறைந்த அளவு உட்கொள்வது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News