அன்னு ராணி, முரளி ஸ்ரீசங்கர் உலக கான்டினென்டல் தடகளத்தில் முதலிடம்
நேற்று உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டிஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ,உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான (செப் 13-21, டோக் கியோ) தகுதிச் சுற்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தியாவின் அன்னு ராணி, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் , 4வது வாய்ப்பில் அதிகபட்சமாக 62.01 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை இலங்கையின் தில்ஹானி (56.27 மீ.,), இந்தியாவின் தீபிகா (54.20 மீ.,) கைப்பற்றினர்.
இந்தியாவின் ஷிவம் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ,(80.73 மீ.,) 2வது இடம் பிடித்தார். இந்தியாவின் ரோகித் யாதவ் (80.35 மீ.,), சச்சின் யாதவ் (79.80 மீ.,),யாஷ்விர் சிங் (78.53 மீ.,) முறையே 4, 5, 6வது இடம் பிடித்தனர்.
இந்தியாவின் விஷால் ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில், (45.72 வினாடி), அமோஜ் ஜேக்கப் (45.86), சந்தோஷ் குமார் (46.89 வினாடி, தமிழகம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
இந்தியாவின் அபினயா பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் (11.57 வினாடி), ஸ்னேகா (11.70), நித்யா காதே (11.70) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
மலேசியாவின் ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் முகமது அசீம் (10.35 வினாடி) முதலிடம் பெற்றார். இந்தியாவின் லாலு பிரசாத் போய் (10.54 வினாடி), ராகுல் குமார் (10.59, தமிழகம்) முறையே 4, 6வது இடம் பிடித்தனர்.
தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் நந்தினி பெண்களுக்கான 100மீ., (13.80 வினாடி) 2வது இடம் பிடித்தார். ஒடிசா வீராங்கனை பிரக்யான் பிரசாந்தி சாஹ் (13.74) முதலிடத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் அதிகபட் சமாக 8.13 மீ., தாண்டி முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்து இரு இடங்களை ஷாந்வாஸ் கான் (8.04 மீ.,), லோகேஷ் சத்யநாதன் (7.85 மீ.,) பிடித்தனர்.
இந்தியாவின் அனிமேஷ் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 20.77 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தின் ராகுல் குமார் (21.17) 3வது இடத்தை கைப்பற்றினார். .
0
Leave a Reply