இந்தியாவின் உலக பாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடரில் பவினா பென் படேல்'தங்கம்'
இந்தியாவின் உலக பாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர்அமெரிக்காவின் வாஷிங்டனில் பெண்கள் ஒற்றையரில் பவினா பென் படேல், அரையிறுதியில் பிரிட்டனின் மேஹன் ஷாக்லெட்டனை 30 எனவென்றார். அடுத்து நடந்த பைனலில் பவினா பென், இஸ்ரேலின் கரோலினை சந்தித்தார்.
முதல் செட்டை பவினா 11-4 ,2 வது செட்டில் 11-4 , மூன்றாவது செட்டில் பவினா, 11-5 என வென்றார். முடிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியாவின் பவினா பென், சுபம் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவு லீக் போட்டியில், பிரேசிலின் பிராகா, சுலோவாகியாவின் போரிஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-0 என (12-10, 11-8, 11-9) வெற்றி பெற்றது.
0
Leave a Reply