25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வேளாண்மை

Apr 22, 2024

லாபகரமான மாடித்தோட்டம்

மாடித்தோட்டத்தில் காய்கறிச் செடிகளை வளர்க்க, வெயில் கிடைக்கும் இடமாகப் பார்த்துத் தோட்டம் அமைக்க வேண்டும். காய்கறிச் செடிகள் வளர்க்கக் கற்றுக் கொண்டால்வீட்டின் காய்கறிச் செலவைகணிசமாகக்குறைக்கும்.இயற்கை விவசாயத்தில் விளைந்த, ரசாயனமற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்' என்கிற விருப்பம் மக்களிடையே பெருகிவருகிறது. ஆனால், இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை வாங்குவதும் பெறுவதும் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இதற்காகத்தான் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தைச் செயல்படுத்திவருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கான இட வசதி பெரிதாக இருப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் வளர்க்க வேண்டிய சூழலும் உள்ளது.குறுகிய இடத்தில். மாடித் தோட்டத்தை லாபகரமானதாகச்செய்ய வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைக்கும். காய்கறிகளின் விளைச்சல், நம் வீட்டின் செலவைகணிசமாகக் குறைப்ப தோடு, இயற்கையானகாய்கறிகளைச் சாப்பிடக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். காய்கறிச் செடிகள் வளர்க்கும்போதுதான் மாடித்தோட்டத்தின்நோக்கம் பூர்த்தியாகும்..வீட்டுத் தோட்டத்தில் வெண்டை, கத்தரி, சீனி அவரை, பச்சை மிளகாய், தக்காளி, வகைக்கு 10 செடி வைத்தாலே வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் தாராளமாகக் கிடைக்கும். மருந்து அடிக்காத ரசாயன உரம் இல்லாத காய்கறிகள், செலவும் மிச்சம். கீரைவகைகளும் மல்லி, பாலக்கீரை, பொன்னாங்கன்னி, புதினா, பசலைக்கீரை,வல்லக்கீரை எளிதாக வளர்க்கலாம். முருங்கை, எலுமிச்சை பயிர் செய்யலாம்.

Apr 15, 2024

நோயில்லா உலகை படைக்க இயற்கை வேளாண்மை

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வளவு அவசியமோ அதே போன்று மனிதன் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்துள்ள உணவு அவசியம்ஒவ்வொரு நாட்டினுடைய முதுகெலும்பும் விவசாயம் ஆகும். விவசாயம் உணவுக்கு மட்டும் இல்லாமல் அதைச் சார்ந்த தொழிலுக்கும் பயன்பட்டு வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது என்றே சொல்லலாம். இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்வேளாண்மையின் முக்கியத்துவத்தைஅறிந்ததால் தான்அனைத்து முன்னனிநாடுகளும் போட்டிபோட்டு பாதுகாத்து வருகின்றன.இயற்கை வேளாண்மை நாட்டில்வளர வேண்டும் என தமிழக அரசு1966ம் ஆண்டுபசுமைப் புரட்சிகொண்டு வரப்பட்டது.பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக அனைத்து நாடுகளும் தானியங்களும், காய்கறிகளும் அதிகமாக வேண்டும் என செயற்கை உரங்களை பயன்படுத்தி விரைவான விளைச்சலை பெற ஆரம்பித்து விட்டன. இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றன. இவை மனிதர்களின் உடலை தாக்குவதோடு சுற்றுப்புற சூழலையும் மாசடைய செய்கின்றன. செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் செடிகளுக்கு விஷ தன்மையை கொடுக்கிறது.நம்முடைய மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு. இயற்கை வேளாண்மையை விவசாயத்தில் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது, மண்ணின் தன்மை சிதைவடையாமல் இருக்க உதவுகிறது.இயற்கை வேளாண்மையில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள், உபயோகப்படுத்தப்பட்ட காபீ தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, சத்துள்ள காய், கனிகளும் கிடைக்கின்றன. நிலங்களின் தன்மையை மீட்டு எடுப்பதற்கும் இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது.உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இயற்கை வேளாண்மை அவசியம்.இயற்கை வேளாண்மைக்கு நெல், கோதுமை, மக்காச்சோளம், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்களை பயிரிட்டால் அமோக விளைச்சலை விவசாயத்தில் பெறலாம்.இயற்கை வேளாண்மை சுற்றுப்புறத்திற்கு நன்மையையும், மனிதர்களுக்கு சத்துள்ள உணவுகளையும் கொடுக்கிறது. இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மையை பெருக்குவது அனைவரின் கடமையாகும்..

Apr 08, 2024

பப்பாளி சாகுபடி 

பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதற்கு பறங்கிப்பழம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.பப்பாளியின் தாயகம் மெக்சிக்கோவாகும். தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் பப்பாளி அதிகமாக விளைகிறது.கோ.1,கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7, கூர்க்கனிடியூ மற்றும் சூரியா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல்இருப்பதுநல்லது.பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.ஒரு எக்டருக்கு நடவு செய்ய500 கிராம் விதைகள் தேவைப்படும்.நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.நிலத்தை2 அல்லது3 முறை உழுது சமன் செய்ய வேண்டும். பிறகு1.8 மீட்டர் இடைவெளியில்45 செ.மீ நீளம்,45 செ.மீ அகலம் மற்றும்45 செ.மீ ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை கொடுக்க வேண்டும்.நட்ட20 நாட்களில் களை எடுக்க வேண்டும். செடிகளைச் சுற்றி களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களை எடுத்தப் பின் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.நன்கு திரண்ட பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.மகசூலானது இரகங்களை பொறுத்து வேறுபடும். கோ.2 இரகமாக இருந்தால் எக்டருக்கு250 டன்களும், கோ.3 இரகத்தில்120 டன்களும், கோ.5 இரகத்தில்250 டன்களும், கோ.8 இரகத்தில்160 டன்களும், கோ.7 இரகத்தில்225 டன்களும் மகசூல் கிடைக்கும்.பப்பாளி சாகுபடியின் நோய்தண்டு அழுகல்/ தூர் அழுகல் நோய்,பப்பாளி மாவுப்பூச்சிசாம்பல் நோய், வளைப்புள்ளிநோய், இலைசுருண்டல்நோய்,,ஆன்த்ராக்நோஸ்பப்பாளி சாகுபடியில் வரும் நோய்கள்..

Mar 18, 2024

காளான் வளர்ப்பு முறை

காளானில் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் இதயம்சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.போலிக்ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது.சிறந்த கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்புசத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றதாதுக்களும் காளானில் உள்ளன.காளான் வகைகள் மொத்தம் சுமார் 20,000  வகைகள் உள்ளன.இந்தியாவில் மட்டும் 2,000 வகைக்காளான்கள் இருப்பதாகவும் இதில்சிப்பிக் காளான், மொட்டுக்காளான் நாட்டுக் காளான்,அரிசிக் காளான் மற்றும்பால் காளான் போன்றவைபயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இயற்கையில் கிடைக்கும் காளான்கள் வகையில்,நல்லவை என்று நன்குதெரிந்த பின்பே உண்ணவேண்டும்..காளான் வளர்ப்பு முறையில்(kalanvalarpu) சுத்தமான வைக்கோல் 12 இஞ்ச் நீளத்தில் வெட்டி 68 மணிநேரம் தண்ணீரில் நன்கு அழுத்தி ஊறவைக்க வேண்டும்.பின் வைக்கோலை எடுத்து மூடியுள்ள பாத்திரத்தில் ஆவியிலோ(அல்லது) சுடு தண்ணீரில் 2 மணிநேரம் அழுத்தி வைக்கவும்.தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட்டு, சுத்தமான தரையில் கைகளால் இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாத அளவிற்கு உலர்த்த வேண்டும்.வீரியமான நன்கு வளர்ந்த காளான் வித்து பாக்கெட்டை 10 சம பாகங்களாக பிரித்தல் வேண்டும்.P.P(1 அடிக்கு2 அடி) கவரில்5 அடுக்கு வருமாறு இரண்டு படுக்கை2¾-3 வரை இருக்குமாறு தயார் செய்ய வேண்டும்.சுத்தமானS.S(STAINLESSSTEEL) கத்தியில் பக்கத்திற்கு நான்கு துளைகள் இட வேண்டும்.20 நாட்கள் இருட்டு அறையில் வைத்து விட வேண்டும். படுக்கை வெள்ளையாக மாறிய பின் தினமும்3 வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும்.மொட்டு வைத்த3 வது நாள் அறுவடை செய்து துளையிட்ட பாலித்தீன் கவரில் எடை போட்டுச் சீல் வைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Mar 11, 2024

வெந்தயக் கீரை வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்

மேத்தி’ என்றும்அழைக்கப்படும் வெந்தயம் பருப்புவகை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த தாவரத்தின் விதைகள்மற்றும் இலைகள் இரண்டும்உண்ணக்கூடியவை. விதைகள் மசாலாப்பொருளாகவும், உலர்ந்த இலைகள்மூலிகையாகவும், புதிய இலைகள்கீரை வகை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இந்தவெந்தயக்கீரை சமையல், மசாலா ,  அழகுசாதன பொருட்கள், சோப்புகள் மற்றும் மருந்துகள் தயாரிக்க என பல்வேறுவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.வெந்தய விதைகள்மூட்டு வலியை நீக்குதல், இரத்த சர்க்கரை அளவைக்குறைத்தல் மற்றும் முடிவளர்ச்சியை அதிகரிக்க எனசிறந்த மருத்துவ குணங்கள்நிறைந்ததாக காணப்படுகிறது.வெந்தயம்கீரை தாவரம், மண்ணில் நைட்ரஜனின் அளவை சரிசெய்ய உதவுகிறது.வெந்தய செடியைவளர்க்க, பகுதியளவு சூரியஒளி படும் இடத்தைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது 4 முதல் 5 மணி நேரசூரிய ஒளிப்படும் இடமாகதேர்தெடுக்க வேண்டும்.ஒருஇடத்தில் நடுவு செய்தல்அதனின் முதிர்ச்சியடையும் காலம்வரை ஒரே இடத்தில்இருப்பது சிறந்தது. அதனால்வெந்தய செடிகளை கொள்கலன்களில் நடவு செய்யலாம்.வெந்தய செடிகள் வெதுவெதுப்பான மண்ணில் செழித்து வளரக்கூடியது. எனவே தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஆனால் வடஇந்தியாவில் மார்ச், ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் நவம்பர் வரை பயிர் செய்வது சிறந்தது.வெந்தய செடிகளை நடவு செய்வதற்கு முன்னால் அந்த வெந்தய விதைகளை, அறை வெப்பநிலையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் விதைகளை ஒரே இரவு ஊற வைக்கவும் மறுநாள் நடவு செய்வதற்கு தண்ணீரை வடிகட்டிய பின்னர் அதனை நடலாம்.தேர்தெடுத்த இடத்தில் விதைகளை மண்ணில் சமமாக தூவி,1/4 அங்குல மண்ணில் விதைகளை மூடவும்.மண் சமமாக ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், செடிக்கு அதிகமாக தண்ணீர் விடாதீர்கள், தண்ணீர் தேங்கியுள்ள மண் செடியின் வளர்ச்சியை தடுக்கும்.நடவு செய்த3 முதல்4 வாரங்களில் செடி அறுவடைக்கு தயாராகிவிடும்.

Mar 04, 2024

பனங்கிழங்கு உற்பத்தி செயல்முறைகள்

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பனை சீஸன் காலம். இந்தச் சீஸனுக்குப் பிறகுதான் பனங்காய்கள், பழுத்து பனம்பழங்களாகக் கீழே விழும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைக்க வேண்டும். பனை தோட்டங்களில் இருந்து பனைவிதைகளைச் சேகரிக்கலாம். சில தோட்டங்களில் பனை விவசாயிகளே பனைவிதைகளை விற்பனை செய்கிறார்கள்.அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நட்டால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும்.5 அடி நீளம்,3 அடி அகலம்,1அடிஉயரம்பார்கள்அமைக்கவேண்டும்.பனைவிதைகளின்எண்ணிக்கையைப் பொறுத்து, பார்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.குறைந்தபட்சம்1 அடி உயரத்தில் பார் அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் எளிதாக இருக்கும். பார் அமைத்த பிறகு,10 கிலோ எரு,2 கிலோ வேப்பந்தழை,3 கிலோ அடுப்புச்சாம்பலை(ஒரு பாத்திக்கான அளவு) கலவையாக்கிப் பரவலாகத் தூவி விட வேண்டும். அதன் பிறகு, பார்கள் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இடம் வசதி குறைவாக உள்ளவர்கள், ஓர் அடுக்கு விதைப்பு முடிந்தவுடன், அதன் மீது மண் போட்டு மூடி இரண்டு அடுக்குகளாக விதைகளை அடுக்கலாம். ஆனால், இரண்டாம் அடுக்கில் உள்ள கிழங்குகள் திடமாக இருக்காது.விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப்பகுதியை கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்துவிட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒன்றும் அதிகபட்சமாகமூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச்சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்து விடவேண்டும். பாத்தியின் மீது 'கண் பாகம்' கீழ் நோக்கி இருக்கும்படி நெருக்கமாக அடுக்க வேண்டும்.அடுக்கிய பிறகு, அதன் மீது லேசாக மண் தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்றவேண்டும்தண்ணீர் ஊற்றும்போது, மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்கு களில் சென்று சேரும். மேல் பகுதியில், மண் குறைந்தால், மீண்டும் மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். இந்தப் பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காக மூடினால், நீர் ஆவியாகாது. இதனால், கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.20 நாள்களுக்குப் பிறகு முளைக்கத் துவங்கும்.40வது நாளுக்கு மேல் வேர் பிடித்து வளரும். இதன் வேர்ப்பகுதி மாவுப்பொருளைச் சேகரித்துக் கிழங்காகிறது.60வது நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் துவங்கும்.90 முதல்110வது நாளுக்குள் அறுவடை செய்யலாம்.90வது நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புக் காணப்படும். அப்போது ஒரு கிழங்கைத் தோண்டிப் பார்த்தால், தோல் வெடித்த நிலையில் காணப்படும். அதிகபட்சமாக110வது நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்கு மேல் சென்றால், கிழங்கிலிருந்து பச்சை நிறத்தில்'பீலி' வெளிப்படும். இதனால், கிழங்கு சுவையாக இருக்காது.130வது நாளுக்கு மேல் சென்றுவிட்டால், கிழங்கு தன் பதத்தை இழந்து, சுருங்கி பீலி நீண்டு இளம் குருத்துப்பனையாக வளர ஆரம்பித்துவிடும்.கிழங்கு பிடிக்கத் துவங்கியதும்'கணக்கான்' என்ற வெள்ளைநிறப் புழுவின் தாக்குதல் தாக்கும். இதைக் கட்டுபடுத்திடத்தான் விதை ஊன்றும் போதே, அடுப்புச்சாம்பலும், வேப்ப இலைகளையும் தூவுகிறோம். கிழங்கு வேகமாகவும், பருமனாகவும் வளர, ரசாயன உரத்தை பாத்தியின் மீது தூவியும், தண்ணீரில் கரைத்தும் சில விவசாயிகள் தெளித்து வருகிறார்கள். அறுவடை செய்த கிழங்குகள் தோல் சுருங்காமல்5 நாட்கள் வரை இருக்கும் என்றால், ரசாயன உரம் தெளிக்கப்பட்ட கிழங்குகளின் தோல் மறுநாளே சுருங்க ஆரம்பித்து விடும்.கிழங்குகளைப் பிடுங்கிய பிறகு, தொங்கும் கொட்டையை வெட்டிவிட வேண்டும். இதற்குள், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று தவின் இருக்கும். இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தத் தவினை, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்தத் தவினை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையும் செய்கிறார்கள்.

Feb 26, 2024

புடலையில் அதிக மகசூலைப் பெற....

அனைவரும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும், பூசணி வகை குடும்பத்தைச் சேர்ந்தது புடலங்காய். இதுஎளிதாக பயிராகும் காய் வகைகளில், வேகமாக வளரக் கூடியதும், அதிக மகசூல் தரும் பயிராகும்.மண், தட்ப வெட்ப நிலை: புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு25 முதல்30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு20 முதல்25 டன் வரை மகசூல் பெறலாம்ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.நிலத்தை நன்றாக3 அல்லது4 முறை உழவு செய்ய வேண்டும்.கடைசி உழவின்போது20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு2 மீட்டர் இடைவெளியில்60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில்1.5 மீட்டர் இடைவெளியில்45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு1.5 முதல்2 கிலோ விதையளவு தேவைப்படும். விதையை2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட8 முதல்10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக20 முதல்30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.புடலைக் கொடி வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும்.இரண்டு இலைப் பருவத்தில் எத்ரல்250 பிபிஎம் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சி ஊக்கியை ஒரு வாரத்துக்கு3 முறை தெளிக்க வேண்டும்.புடலையில் பூசணி வண்டின் தாக்குதல் அதிகளவில் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த2 கிராம் செவின் அல்லது கார்பரில் மருந்தை1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான்1 சதவீதம் தெளிக்க வேண்டும்.விதை ஊன்றிய 80 நாள்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். பின்னர் ஒரு வார இடை வெளியில் 6 முதல் 8 அறுவடை கிடைக்கும். மேற்கண்ட வழிமுறைகளில் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு20 முதல்25 டன் வரை புடலங்காய் மகசூலைப் பெறமுடியும்..

Feb 19, 2024

வெண்டை . ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாளில் 15 டன் வரை 45வது நாளில்  இருந்து அறுவடை செய்யலாம் 

 வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் தேவை. பனி மூட்டத்தாலும் ,குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.பருவம்: ஜூன் - ஆகஸ்ட், பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடலாம்.ஹெக்டேருக்கு7.5 கிலோ விதை போதும்.3 அல்லது4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு 45 செமீ இடைவெளி விட்டு வரிப்பாத்தி (பார்சால்) அமைக்கவேண்டும். விதைப்பதற்கு24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில், வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல் வேண்டும்.நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும், பிறகு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.அடியுரமாக20 கிலோ தழைச்சத்து,50 கிலோ மணிச்சத்து,30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர்க் கலவையை20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம். மேலுரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியம்.12 கிலோ இடவேண்டும்.ஹெக்டேருக்கு400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும்போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான்3ஜி குருணை மருந்து1 கிலோ அல்லது போரேட்10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.45 நாளிலேயே அறுவடை செய்யலாம். காய்கள் முற்றும் முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.2 நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம். ஹெக்டேருக்கு90 முதல்100 நாளில்15 டன் வரை காய்கள் கிடைக்கும்.

Feb 12, 2024

சிலந்திகளை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் தாவரங்கள்

சிலந்திகளை வீட்டில் இருந்து அகற்றுவதற்கு  இந்த தாவரங்களை வீட்டிற்குள் வைக்கலாம் .அவை சிலந்திகளை விரட்ட உதவும். எலுமிச்சம்பழம் லெமன்கிராஸ், சிட்ரோனெல்லா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிட்ரஸ்சுவை மையமாகும்.சிலந்திகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எலுமிச்சம்பழத்தின் அத்தியாவசிய எண்ணெய்கள் காரமானவை சிலந்திகளை விரட்ட உதவும்.புதினாவின் ஒரு சிறந்த இயற்கை பூச்சி விரட்டியாகும். நீங்கள் புதினாவை வெளியில் அல்லது உங்கள் சமையலறையில்,, வைக்கலாம். புதினா தண்ணீரை அறைகளில் தெளிக்கவும்.புதினா குடும்பத்தைச் சேர்ந்தது, எலுமிச்சை தைலம் சிட்ரஸ் விளிம்பையும் கொண்டுள்ளது.சிலந்திகள் சிட்ரஸ் வாசனையை வெறுப்பதால், சிறந்த சிலந்தி விரட்டியாகும். சிலந்திகளை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் மற்றொரு செடி ரோஸ்மேரி மனிதர்கள் மங்கலான வாசனையைக் கண்டாலும், சிலந்திகளுக்கான ரோஸ்மேரி மிகவும் தீவிரமானது.உங்கள் அறையில் ரோஸ்மேரி பானையை வைத்து, சிலந்திகளை  விரட்டவும். வீட்டிற்குள்லாவெண்டர்களைவைத்திருந்தால்,அதுசிலந்திகளைவிரட்டும்.லாவெண்டர் பூக்களை உங்கள் அறைகளில் வைக்கலாம். துளசி ஒரு வலுவான மூலிகை என்பதால், அதன் வாசனை சிலந்திகளை விரட்டும். நீங்கள் துளசி தண்ணீரை தெளிக்கவும் முயற்சி செய்யலாம்..

Feb 05, 2024

வீட்டிற்குள் எலிகளை நுழைய விடாத தாவரங்கள்

எலிகள் உங்கள் அழகான வீட்டை நாசமாக்கினால், அதை மீட்டெடுக்க உதவும்  தாவரங்கள் .வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் பொதுவான வீட்டுப் பொருட்கள். இந்த காய்கறிகள் எலிகள் மற்றும் எலிகளை விரட்டும் மிகவும் கடுமையான வாசனையைக் கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு பூண்டு செடியை வைக்கலாம் அல்லது சிலவற்றை வெவ்வேறு இடங்களில் வைக்கலாம்.அழகான ஊதாலாவெண்டர் செடி வாசனை எலிகளுக்கு வெறுக்கத்தக்கது. உங்கள் வீட்டிற்குள் ஒரு குவளையில் சில லாவெண்டர் பூக்களை வைக்கலாம், அதன் கடுமையான வாசனை எலிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கும்.இந்த பிரபலமான வசந்த பூக்கள் ஒரு இனிமையானவாசனை மலர், ஆனால் எலிகளுக்கு வெறுக்கத்தக்கவை. வெளிப்புற தோட்டத்தில் இயற்கை ஒளியின் கீழ் தாவரத்தை வீட்டிற்குள் வைக்கலாம்.கொறித்துண்ணிகள் வலுவான மணம் கொண்ட தாவரங்களை வெறுக்கின்றன. எனவே, புதினா குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு தாவரமும் எலிகளை விலக்கி வைப்பதில் நன்றாக வேலை செய்யும். உங்கள் தேவைக்கேற்ப புதினா செடிகளை வீட்டுக்குள்ளும் வெளியிலும் வைக்கலாம். வீட்டைச் சுற்றி புதினா ஸ்ப்ரேயையும் பயன்படுத்தலாம்.

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News