25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Aug 02, 2022

எலுமிச்சை செடி பாதுகாப்பு முறை

பயிர் வளர நல்ல காற்றோட்டம் அவசியம். தழைச்சத்து அதிகமாக இடுவதை தவிர்க்கவும். களை இன்றி பராமரிக்கவும். வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகளை, ஒட்டும் திரவம் கலந்து, 15நாள் இடைவெளியில் 3முறை தெளிக்கவும் .வேப்பம் புண்ணாக்கு மரத்தின் அடியில் இடவும். பூச்சிகளின் பாதிப்பு அதிகமாகும் போது ,அசிபேட் மானோகுரோட்டோடாஸ் போன்ற பூச்சி கொல்லியை 2 லிட்டர் நீரில் 2 மில்லி கலந்து செடி நனைய அடிக்கவும். 

Jul 10, 2022

வீட்டுத் தோட்டம்.

புடலங்காய் கொடிக்கு பந்தல் போடும்போது,2 மீட்டராவது உயரம் இருக்க வேண்டும்.மிளகாய்ச் செடியில் பூக்கள் பூத்திருக்கும் போது சிறிது சர்க்கரை (அ) வெல்லம் கலந்த தண்ணீரை செடியின் மீது தெளித்தால், வண்டுகள் பூக்களை மொய்த்துவிடும். இதனால்பூக்கள் காயாகிவிடும்.பயன்படுத்த முடியாமல் இருக்கும் மோர். தயிரை, கறிவேப்பிலை செடிக்கு ஊற்றினால், செடி செழித்து வளரும். 

Jun 16, 2022

விவசாயிகள் கவனத்திற்கு..

 கருவேல மரங்களை அடி யோடு ஒழிக்கும் 'அக்ரோ கேர்' என்ற புதிய மருந்தை மதுரை 'சத்யகிரஹா பவுண் டேஷன்' அமைப்பினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் நிறுவனர் ரமணன் கூறியதாவது:கருவலே மரங்கள் குறித்துஆய்வு செய்வதற்கான ஆய்வகம் இந்தியாவில் இல்லை.வியட்நாமில் டாக்டர் டாம் என்பவர், இதுதொடர்பாக 15 ஆண்டுகள் ஆய்வு செய்து இம்மருந்தை கண்டுபிடித் துள்ளார். எங்கள் பவுண்டேஷனும் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சிகளை எடுத்து வந்தது. அவரது மருந்தை இங்கு சோதித்து பார்த்தபோது, கருவேல மரம் 7 நாட்களில் கருக ஆரம்பித்தது. 'அக்ரோ கேர்' என்ற இம்மருந்து, ஒரு ஏக் கரில் பயன்படுத்த ரூ.4 ஆயிரம் செலவாகும். இதை பயன்படுத்தினால் முற்றிலுமாக ஒழித்து விடலாம். கருவேல மரங்கள் பாதித்த மாவட்டங்களுக்கு இந்த மருந்து ஒரு வரப்பிரசாதம்,என்றார்.தொடர்புக்கு 98658 78142.  

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News