தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், ‘நிலையான வேளாண்மைக்கான காலநிலை மாற்றதிற்கேற்ற மேலாண்மை உத்திகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை
விருதுநகர் பர்மா ஹோட்டல் கூட்டரங்கில் (03.12.2024) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், வேளாண்மைத்;துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ‘நிலையான வேளாண்மைக்கான காலநிலை மாற்றதிற்கேற்ற மேலாண்மை உத்திகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காலநிலை மாற்றம் என்பது சுற்றுசூழல், மனித இனம், பொருளாதார சொத்துக்கள் மற்றும் செயல்பாடுகளில் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அவற்றை எதிர்கொள்ள வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்துகின்றது. இதனடிப்படையில் தமிழகத்தை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க மாநிலமாக மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.அதனடிப்படையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், வேளாண்மைத்;துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ‘நிலையான வேளாண்மைக்கான காலநிலை மாற்றதிற்கேற்ற மேலாண்மை உத்திகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காலநிலை மாற்றத்தினால் முதலாவதாக பாதிப்படையக்கூடியது நம்முடைய உணவு தானிய உற்பத்தி தான். குறிப்பாக ஆசிய நாடுகளின் முக்கிய உணவு தானிய பயிர்களான நெல் மற்றும் கோதுமை வெப்பத்தினால் பாதிப்படையக்கூடியது. எனவே காலநிலை மாற்றத்தினால் இவற்றின் உற்பத்தி அதிக அளவு பாதிப்படைய வாய்ப்புள்ளது. தீடீர் மேக வெடிப்பு மற்றும் அதீத வெப்பம் போன்ற நிகழ்வுகளுக்கேற்றவாறு புதிய வேளாண்மை யுத்திகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் ‘காலநிலை மாற்றத்திற்கேற்ற உழவியல் நடவடிக்கைகள்” குறித்து விரிவாக உடுத்துரைத்தார்.
மேலும் வேளாண்மை அறிவியல் மையத்தை சார்ந்த விஞ்ஞானிகள், ‘காலநிலைமாற்றத்தை தாங்கும் தன்மையுடைய தோட்டக்கலை பயிர் இரகங்கள், மண்வள மேலாண்மை, வறண்ட மண்டலத்திற்கேற்ற பழவகைகள் சாகுபடி மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பை தணிக்க பயன்படுத்த வேண்டி பயிர் ஊக்கிகள் மற்றும் இலைவழி உரமிடுதல்” போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.தொடர்ந்து, இராஜபாளையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசியர் அவர்கள் காலநிலை மாற்றத்திற்கேற்ற கால்நடை இனங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் முனைவர் ரமேஷ், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியத் திட்டம்) திருமதி சுமதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply