ரோஜா குல்கந்து நன்மைகள்
ரோஜாமலரிலிருந்துதயாரிக்கப்படும்மருத்துவகுணமிக்கஉணவுப்பொருள்தான்குல்கந்து.மணம்தரும்பொருளாகஉணவுப்பதார்த்தங்களில்சேர்த்துசமைப்பதால்சுவையோடுஆரோக்கியமும்மேம்படுகிறது. இதில்அரோமேட்டிக்வோலடைல்ஆயில், டானிக்ஆசிட், காலிக்ஆசிட்போன்றவைஅடங்கியுள்ளன.
ரோஜா குல்கந்து துவர்ப்பு சுவையுள்ளதால் இரத்தக் குழாய்க்கும், இதயத்திற்கும் கல்லீரலுக்கும் வலிமையூட்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.வயிற்றின் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. செரிமானம் சீரான முறையில் நடைபெற உதவுகிறது. பசியைத் தூண்டி குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. வயதானவர்களின் வாய்வுத் தொல்லையை போக்குகிறது. குல்கந்தை வெந்நீருடன் அருந்த மலம் இறுகி மலச்சிக்கல் உண்டாகி இருப்பதை போக்குகிறது.
வெந்நீருடன் கர்ப்பிணிகள் இதை சாப்பிட, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும். வெப்பத்தினால் ஏற்படும் பலவீனம், சோர்வையும் இது போக்குகிறது. இது சிறுநீரகக் கடுப்பை குணமாக்கும். நன்னாரி சர்பத்துடன் குல்கந்து சேர்த்து கலந்து அருந்த உடல் வலிமையாகும். உடல் அரிப்பு மற்றும் வெப்ப நோய்களை இது விரட்டுகிறது.
கொப்புளங்கள், நாப்கின் பயன்பாட்டால் வரும் புண்கள், சரும அரிப்பு போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரோஜா குல்கந்து பருகும் பானங்கள் மற்றும் உணவுகளில் நறுமணப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் இதில் நிறைந்துள்ளன.அரிப்பு மற்றும் வெப்ப கொப்பளங்களுக்கு அவிபத்திகர சூரணம் என்ற ஆயுர்வேத மருந்துடன் குல்கந்து சேர்த்து சாப்பிட, நல்ல நிவாரணம் கிடைக்கும். குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி சரும பளபளப்பைத் தருகிறது.
வியர்வையால் உண்டாகும் வாடையைப் போக்குகிறது. உடல் உஷ்ணம் உள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும். அவர்கள் குல்கந்தை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் பெருகி ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும்.பலவிதங்களில் பயன்படும் குல்கந்தை உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வோம்
பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் கிடைக்கப்பெற்ற ரோஜா இதழ்கள்200 கிராம், பெரிய கற்கண்டு100 கிராம் மற்றும் தேன் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து காற்று புகாத டப்பாவில் வைக்கவும். இதனை பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவு, சிறியவர்கள் 1 டீஸ்பூன் அளவும் சாப்பிடலாம்
0
Leave a Reply