25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Aug 01, 2023

கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்கிறீர்களா? நீங்கள் வரும் வரைக்கு உங்கள் வீட்டு செடிகளை பட்டு போகாமல் எப்படி பாதுகாக்கலாம்?

கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியூர் செல்கிறீர்களா?  . நீங்கள் வரும் வரைக்கு உங்கள் வீட்டு செடிகளை பட்டு போகாமல் யார் பார்த்து கொள்வார் என்று புலம்புவது உண்டு.வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் நீங்கள் இல்லாமல் தினசரி எளிதாக நீர் பாய்ச்சவும் முடியும்.நீர் பாய்ச்சுதல் நீங்கள் விடுமுறையில் இருக்கும் போது உங்கள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்பது கஷ்டமான விஷயம். வெளிப்புற மற்றும் உட்புற தாவரங்களை இந்த வெயிலுக்கு விட்டுச் செல்லும் போது ஆழமான நீர்ப்பாசனம் அவசியம். எனவே இதற்கு நீங்கள் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தலாம்.தொட்டியில் உள்ள மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க இந்த சொட்டு நீர் பாசன முறை உதவுகிறது. இதற்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் ஒரு ஓட்டை போட்டு அதில் டுயூப்பை சொருகி தலைகீழாக தொங்க விட்டு சொட்டு சொட்டாக தண்ணீர் சிந்தும் படி வைக்கலாம். இதன் மூலம் செடிக்கு தினசரி தண்ணீர் தேவை பூர்த்தியாகும். நீங்கள் வரும் வரைக்கு செடி வாடிப் போகுமே என்ற கவலை கிடையாது. மேலும் தொட்டியில் கூலாங்கற்களை போட்டு வைப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாத்து வைக்கும். போகும் முன்பு செடியை நிழலில் வைத்து செல்வது முக்கியம். அதிகப்படியான சூரிய ஒளியில் இருப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செடியை சீக்கிரமே காய்ந்து போக வைத்துவிடும். எனவே தொட்டியை தூக்கி நிழலான இடத்தில் வைப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை நீண்ட நேரம் காக்க உதவி செய்யும். ஒரு சில நாட்களுக்கு தாவரங்களை வெயில் படாதபடி வைத்து செல்லுங்கள். சுய நீர்ப்பாசன சாதனங்களை பயன்படுத்தலாம் செடிகளுக்கு தானாகவே தண்ணீர் செலுத்த நீர் ஸ்பைக் சாதனங்களை பயன்படுத்தலாம். கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி அதை தலைகீழாக வைத்து இந்த ஸ்பைக் சாதனத்தை மாட்டினால் போதும் தண்ணீர் சொட்டு சொட்டாக செடிகளுக்கு எளிதாக பாய ஆரம்பித்து விடும். மேலும் கண்ணாடி குளோப்களை பயன்படுத்தியும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இந்த கண்ணாடி குளோப்களில் தண்ணீரை நிரப்பி தலைகீழாக தொட்டியில் வைக்கலாம். இதன் மூலமும் சொட்டு சொட்டாக தண்ணீர் பாய்ச்ச முடியும்.காட்டன் ரோப் நீர்ப்பாசன முறை இந்த முறையை செய்வதற்கு ஒரு வாளி நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது காட்டன் கயிற்றின் ஒரு முனையை வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். மற்றொரு முனையை செடி உள்ள தொட்டியில் வைக்கவும். காட்டன் கயிறு தண்ணீரால் நனைந்து மெல்ல மெல்ல தண்ணீர் செடிகளுக்கு செல்லும். நீங்கள் வரும் வரைக்கு தொட்டியில் உள்ள மண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். தொட்டியில் ஈர வைக்கோலை போட்டு வையுங்கள் நீங்கள் ஊருக்கு போகும் போது தொட்டியில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாக்க ஈர வைக்கோலை படுக்கை மாதிரி போட்டு வைக்கலாம். இது மண் சூரிய ஒளியால் சீக்கிரம் காய்ந்து போகாமல் தடுக்க உதவுகிறது. இப்படி போட்டு வைப்பதன் மூலம் தொட்டியில் களைச் செடிகள் வளருவதை தடுக்க முடியும். மேலும் தொட்டியின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், வேர்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கவும் உதவுகிறது.

Jul 25, 2023

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர

வீட்டில் செடிகள் வளர்ப்பதற்கு ஆசைப்படுவர்களின் பட்டியலில் நிச்சயம் ரோஜா செடிகளுக்கு இடம் உண்டு. எத்தனை வகையான செடிகள்வளர்த்தாலும் ரோஜா செடிகள்தான் முதலிடம் பெறும்.ரோஜா செடிகளை தோட்டத்தில் வைத்து வளர்த்தாலும் அந்த செடிகளுக்கு ஒழுங்கான பராமரிப்பு முறை இருந்தால் தான் பூக்கள் தொடர்ச்சியாக பூத்து கொண்டே இருக்கும்.ரோஜா செடிகளை தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால் நர்சரியில் வாங்கி வரும் செடியை அப்படியே தொட்டிக்குள் வைத்து மண்ணை நிரப்பி விடக்கூடாது.ரோஜா செடிகள் வளர்வதற்கு ஏற்ற வகையில் மண் கலவை அமைந்திருக்கிறதா,அவை சத்தான மண்தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே மண் கலவை கிடைத்தால் அதனையே தொட்டிக்குள் நிரப்பி அதனுள் செடியை நட்டு வைத்து வளர்க்கலாம்.ரோஜா செடிகள் வளர்ப்பதற்கு செம்மண் கலவை சிறந்த தேர்வாக இருக்கும். அக்கலவையுடன் இயற்கை உரத்தையும் கலக்க வேண்டும். பின்னர் அதனை தொட்டிக்குள் நிரப்பி அதனுள் ரோஜா செடியை நடவு செய்ய வேண்டும்.அதற்கு முன்பு செடியின் வேர்களை சூழ்ந்திருக்கும் மண்ணை நன்றாக சுத்தம் செய்தால் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும். வேர் நன்றாக வளர்ச்சி அடைவதற்கும் ஏதுவாக அமையும்.அதுபோல் தொட்டியில் பாதி மண் கலவையை நிரப்பியவுடன் தண்ணீர் ஊற்றிவிட்டு, பின்பு தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்ட பிறகு மண். இயற்கை எரு கலவையை நிரப்புவது சிறந்தது. ஏனெனில் தொட்டியில் மண், இயற்கை எரு கலவையை அடுத்தடுத்து நிரப்புவது செடியின் வளர்ச்சிக்கு துணை புரியும்.நாட்டு ரோஸ் தவிர மற்ற ரோஸ் செடிகளை மண் தரையில் வைப்பதை விடதொட்டிகளில்வைத்துவளர்ப்பதேசிறந்தமுறையாகும்.இவ்வாறுசெய்வதினால் செடிகள் அதிக தளிர்கள் விட்டுநன்றாக வளரும்.அதிக தளிர்கள் விடுவதினால் பூக்களும் அதிகமாக பூக்கும்.ரோஜாசெடியில் பூக்கள் பூக்கும் போது, பூக்களை பறித்து விடுவது மிகவும் சிறந்தது, சிலபேர் ரோஸ் செடியில் பூக்கள் பூத்த பிறகு அவற்றை பறிக்க மாட்டார்கள், அந்த பூக்கள் பூத்து உதிர்ந்து விடும், பூக்கள் உதிர்ந்த பிறகு உடனே நறுக்கி விட வேண்டும். செடிகளில் தளிர்கள் விடுவதை பாதிக்கும். ரோஸ் செடியில் சில சமயங்களில் இலைகள் மஞ்சள் நிறத்தை மாறிவிடும் அந்த சமயங்களில் இலைகளை நறுக்கிவிடுவது மிகவும் நல்லது.இல்லையெனில் செடிகள் பட்டுபோவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இலைகள் கரிகினாலோ அல்லது மஞ்சள் நிறத்தில் மாறினாலோ இலைகளை நறுக்கிவிடுவது மிகவும் நல்லது. இதனால் செடிகள் ஆரோக்கியமாக வளரும்.ரோஸ் செடிகளை பொறுத்தவரை உயரமாக வளர்ப்பதை தடுக்க வேண்டும். ரோஸ் செடி உயரமாக வளர்ந்தால் அப்பறம் பூக்கள் அதிகமாக பூக்காது. எனவே ரோஸ் செடிகளை உயரமாக வளர விடாமல் கிளைகளை நறுக்கிவிடுவது மிகவும் அவசியம்.இவ்வாறு கிளைகளை நறுக்கி விடுவதினால், ரோஸ் செடியில் தளிர்கள் அதிகளவு விடும். இதனால் அதிக பூக்களும் பூக்கும்.ரோஜா செடிகள் பூச்சிகளின் பாதிப்புக்கு உட்படாமல் இருக்க இயற்கை பூச்சிகொல்லி மருந்துகளை தெளித்து வர வேண்டும்.அதாவது வேப்ப பிண்ணாக்கை தண்ணீரில் கலந்து செடிகளின் மீதோ அல்லது செடியின் வேர் பகுதியிலோ தெளித்து விடவும். இந்த முறையை வாரத்துக்கு ஒரு முறை செய்து வர வேண்டும்.இவ்வாறு செய்வதனால், ரோஜா செடிகளை எந்த ஒரு நோய்களும் தாக்காது. செடிகள் நல்ல ஆரோக்கியமாக வளரும்.மற்ற செடிகளை போல் ரோஜா செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கட்டாயமில்லை.மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு தான் தண்ணீர் விட வேண்டும்.ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். தினமும்6 மணி நேரமாவது செடியில் சூரிய ஒளி படும்படி பார்த்து கொள்வது நல்லது.செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்க வேண்டியது அவசியம்.செடிகள் ஓரளவு வளர தொடங்கியதும், தொட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Jul 18, 2023

தோட்டத்தில் காய்கறிகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்

வீட்டு கிச்சன் தோட்டத்தில் நம்மிடம் இருக்கும் மறுசுழற்சி செய்யக்கூடிய திறமையைப் பயன்படுத்தி நாம் விரும்பும் வகையில் பலவகையான காய்கறி தாவரங்களை வளா்க்க முடியும். அதன் மூலம் நமது பணத்தை சேகாிக்க முடியும். வீட்டை சல்லடை போட்டு தேடி ஏற்கனவே பயன்படுத்திய கேன்களைக் கண்டுபிடித்து அவற்றை நகைச்சுவை உணா்வுடன் அலங்காித்து வைக்கலாம். அதோடு வீட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்து அவற்றை மறுபடியும் பயன்படுத்துதல், குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகிய குறிப்புகளைப் பயன்படுத்தி நமது கிச்சன் வீட்டுத் தோட்டத்தை புதுமையாக அமைக்கலாம்.வீட்டுத் தோட்டத்தை முறையாக அமைப்பது முக்கியம் பெட்டகங்கள், தொட்டிகள் மற்றும் பானைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தை அமைத்தால் அது பாா்ப்பதற்கு சீராக மற்றும் அழகாக இருக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அவை நாம் விரும்பும் வாிசையில் அடுக்கி வைக்க உதவியாக இருக்கும். நம்மிடம் இருக்கும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி ஒரு பானையில் பல தாவரங்களை வைத்து தோட்டம் அமைக்கலாம். அதன் மூலம் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான தாவரங்களை வளா்க்க முடியும்.பல வண்ண தாவரங்களைத் தோ்ந்தெடுத்தல் நமது வீட்டுத் தோட்டமானது ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்க வேண்டும். எனவே பாா்ப்பதற்கு அழகாக இருக்கும் மற்றும் பல வண்ணங்களில் இருக்கும் தாவரங்களை வளா்த்தால் நமது தோட்டம் மிகவும் ரம்மியமாக இருக்கும்.உங்கள் வீடு ஊருக்கு தொலைவில் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டில் ஒரு சிறிய காய்கறி தோட்டம் அமைத்துக் கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு இது சற்றே கடினமான விஷமாக இருக்கும். அதற்கு காரணம், பெரிய நகரத்தில் உள்ள பலரும் அடக்கு மாடு குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இதனை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் வீட்டின் மூலையில் இருக்கும் அந்த பச்சை தோட்டம், சோர்வடைந்து வரும் கண்களுக்கு ஆதரவாக இருக்கும்.காய்கறி தோட்டம் வளர்ப்பது அவ்வளவு கஷ்டமா என்ன? கண்டிப்பாக இல்லை. அதற்கு தேவையானது எல்லாம் முடியும் என்ற எண்ணமும், சிறிது நேரமும் மட்டுமே. ஏன் நீங்களும் ஒரு காய்கறி தோட்டத்தை வளர்க்கக் கூடாது? உங்கள் செடிகள் காய்களையும், பழங்களையும் அளிக்கும் போது, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது. சரி எப்படி தான் காய்கறி தோட்டத்தை வளர்ப்பது? அதற்கு நீங்கள் சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ள வேண்டும்நீங்கள் ஒரு கைத்தேர்ந்த தோட்டக்காரர் என்றால், கிடைக்கின்ற சின்ன இடத்தில் எப்படி காய்கறிகளை வளர்ப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தொடக்க முயற்சியாக இதில் நீங்கள் ஈடுபட்டால், காய்கறி தோட்டம் அமைப்பதும் கூட உங்கள் வாழ்க்கையின் ஒரு கற்கும் அனுபவமாக மாறி விடும்.நீங்கள் புதிதாக ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் முதலில் சிறியதாக ஆரம்பியுங்கள். வளரும் காய்கறிகளை நீங்கள் விற்க போவதில்லை. அதனால் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சரி, எந்த காய்கறிகளை சுலபமாக பராமரிக்கலாம்? உருளைக்கிழங்கு, முள்ளங்கி, புதினா, மல்லிச்செடி, குடை மிளகாய் போன்றவற்றில் இருந்து தொடங்கலாம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.இடத்தை தேர்வு செய்யுங்கள் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன் உங்களுக்கு தேவையான முதல் விஷயம் இது தான். செடிக்கு அதிகமாக தேவைப்படுகிற, வெயில் படுகிற ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். சாலட் இலைகளை வளர்த்தால், ஒரு வலையை மேலே போட்டு சற்று நிழலை உருவாக்கிடுங்கள். மண்ணானது ஈரப்பதத்துடன், வடிந்து செல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.இடத்தை தேர்வு செய்த பிறகு, காய்கறிகள் வளர்ப்பதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை தீர்மானியுங்கள். நீங்கள் இப்போது தான் தொடக்க நிலையில் உள்ளீர்கள். அதனால் செடிகளுக்கு முதலில் சிறிய இடத்தையே பயன்படுத்துங்கள். திறந்த வெளியாக இல்லையென்றால் ஒரே தொட்டியில் பல்வேறு வகையிலான மூலிகை செடிகளை வளர்க்கவும்.

Jul 11, 2023

வீட்டில் உள்ள தோட்டங்கள்

பொதுவாக வீட்டில் உள்ள தோட்டங்கள் பலருக்கு முக்கியமான இடங்களாக அல்லது தனித்துவமான பகுதிகளாக இருக்கின்றன. வீட்டுத் தோட்டத்தை அமைப்பதை ஒரு சிலா் தியானமாகக் கருதுகின்றனா். சிலா் அதை ஒரு சிறந்த உடற்பயிற்சியாகக் கருதுகின்றனா். ஒரு சிலா் இயற்கையோடு தங்களை ஐயக்கியமாக்கிக் கொள்வதற்காக வீட்டுத் தோட்டங்களை அமைப்பதில் ஈடுபடுகின்றனா்.சிலா் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் பூச்செடிகளை வளா்ப்பதைவிட, காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளை வளா்ப்பதை அதிகம் விரும்புகின்றனா். ஆங்கிலத்தில் கிச்சன் காா்டன் (Kitchen Garden) என்று அழைக்கப்படும் வீட்டுத் தோட்டமானது, வீட்டைச் சுற்றி இருக்கும் புல்வெளி அல்லது அலங்காரத் தாவரங்கள் போன்றவற்றை வளா்க்கும் பகுதியில் இருந்து வேறுபட்டதாகும்.வீட்டுக் கிச்சன் தோட்டத்தில் காய்கறி செடிகள், பழச்செடிகள், மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் போன்றவை மட்டுமே வளா்க்கப்படும். ஆகவே வீட்டுக் கிச்சன் தோட்டம் என்பதை காய்கறி செடிகள், பழச்செடிகள், மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் வளா்க்கும் பகுதி என்று அழைக்கலாம். இந்தப் பதிவில் வீட்டு கிச்சன் தோட்டத்தை எவ்வாறு புதுமையான முறையில் அமைக்கலாம் என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம். வீட்டின் சுற்றுப்புற பகுதிகளை முறையாகப் பிாித்தல் வீட்டைச் சுற்றி தோட்டம் அமைப்பதற்கு முன்பாக, வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளை திறம்பட பிாிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு பிாிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தாவரங்கள் வளரும் தோட்டத்தின் படுக்கைகள் சற்று உயரமாக இருப்பதைப் போல் அமைக்க வேண்டும். தோட்டத்திற்கு இடையில் உள்ள நடைபாதையை சீராக அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது காய்கறித் தாவரங்களை நன்றாக வளா்க்க முடியும். மேலும் நமது தேவைக்கேற்ப பல்வேறு வாிசைகளில் பல வகையான தாவரங்களை வளா்க்க முடியும். ஒரு தோட்டத்தை முதன் முதலாக பாா்க்கும் போதே அது நமது கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு தோட்டத்தின் நுழைவு வாயில் பாா்ப்பதற்கு அருமையாக இருக்க வேண்டும். நுழைவு வாயிலில் தோரண வளைவை அமைத்து, அதை மலா்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காிக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த நுழைவு வாயில் தனித்துவமாகவும் அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டதாகவும் இருக்கும்.வேளாண்மை தொடர்ச்சி அடுத்த  செவ்வாய்க்கிழமை  18 ஜூலை வரும் . 

Jul 04, 2023

மதுரைமல்லிகை

மதுரைமல்லிகையின் மனமும், நிறமும், தமிழகத்தில்வேறு எங்கும் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில்கண்டறிய முடியாது. அதனால், உள்ளூர் சந்தைகள்முதல் உலக சந்தைகள் வரைமதுரை மல்லிகைக்கு நிரந்தரமாக வரவேற்பு உண்டு.பொதுவாகமல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி மாதம்தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள்அதிகளவு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும்.குளிர்காலத்தில்மல்லிகைப்பூ செடிகளை கவாத்து செய்துஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய்மேலாண்மை செய்தால் நவம்பர் மற்றும் டிசம்பர்மாதங்களில் குளிர்காலங்களில் கூட மல்லிகைப்பூ உற்பத்தியைஅதிகரிக்கலாம்.குளிர்காலங்களில்மல்லிகை பூ விலையானது மும்மடங்குஅதிகரிப்பதால் விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டலாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில்தரையிலிருந்து 45 செ.மீ., உயரத்தில்கவாத்து செய்ய வேண்டும்.கவாத்துசெய்த வெட்டுப்பகுதிகளில் பைட்டலான் பூஞ்சாணக் கொல்லியை தடவி பூஞ்சாணத்தாக்குதலை கட்டுப்படுத்தலாம். கவாத்து செய்யும்போது குறுக்குக்கிளைகள், நோய் மற்றும் பூச்சிதாக்கிய கிளைகள், மெலிந்த சிறிய கிளைகள்ஆகிவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.செடிகளைநன்கு சூரிய ஒளி படுமாறுசெய்ய வேண்டும். கவாத்து செய்தவுடன் தொழுஉரம் 10 கிலோவுடன் 30;60;60 கிராம் தழை, மணி, சாம்பல்சத்து அதாவது, 65 கிராம், யூரியா 375 கிராம், பொட்டாஷ் 100 கிராம் என்ற அளவில்ஒவ்வொரு செடிகளுக்கும் அதன் மையப்பகுதிகளில் இருந்து 1 1/2 அடி அளவிற்கு தள்ளி 1/2 அடிஆழம்குழிபறித்துமண்ணில்இட்டுஉடனேதண்ணீர்பாய்ச்சவேண்டும்.ஒவ்வொரு செடிக்கு500 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இடுவதின் மூலம் நூற்புழுக்கள் தாக்கா வண்ணம் செய்யலாம். கவாத்து செய்து ஒரு மாதம் கழித்து10 மில்லி சைகோசெல் மற்றும்4 மி.லி ஹூமிக் அமிலத்தை10 லிட்டர் தண்ணிரில் கலந்து15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதை செய்தால் நவம்பர், டிசம்பரில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Jun 27, 2023

செடிகள் செழித்து வளர நுண்ணுயிர் பாகாடீரியாவை பயன்படுத்தும் முறை

மாடித்தோட்டம் (maadi thottam) பூ செடிகள் மற்றும் காய்கறிகள் நன்கு செழிப்பாக வளர நுண்ணுயிர் பாகாடீரியாக்கள் மிகவும் பயன்படுகிறது.எனவே இரண்டு ஸ்பூன் ட்ரைக்கோ டெர்மா விரிடி மற்றும் இரண்டு ஸ்பூன் சூடோமோனஸ் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பானை பயன்படுத்தி செடிகள் மீது தண்ணீர் படும்படி தெளிக்கவும்.இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை செய்து வர செடிகள் செழிப்பாக வளரும்.உங்கள் விட்டு மாடி தோட்டம் (maadi thottam) செடிகள் மஞ்சள் மாறி உதிர்ந்து கொட்டுகிறதா? கவலை விடுங்கள் செடிக்கு தழைச்சத்து பற்ற குறையாக இருக்கும்.செடி முழுமையாக தழை சத்தினை பெற மீன் அமிலத்தை 25 மில்லி எடுத்து கொள்ளுங்கள். அவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் இலைகள் மீது படுமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும்.இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கின்றது செடிகள் வளமாக வளர வழிவகுக்கின்றது.

Jun 20, 2023

தீவிர வேளாண்மை

விளைநிலம் சிறியதாக இருந்தாலும் அவற்றில் விவசாயிகள் தீவர வேளாண் சாகுபடி செய்வர். உரங்கள், அதிக மகசூல் தரும் உயர்ரக விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், குடும்பத்திலுள்ளவர்களையே பெரும்பாலும் வேளாண்மையில் ஈடுபடுத்தியும், விளைநிலத்தை ஒருபோதும் வெற்றாக விடாமலும் தீவிர முறையில் பயிர் விளைப்பர்.இந்தியாவில் அதிகமாக விளையும் பயிர் பால், முந்திரி தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியா ஆகும்.

Jun 06, 2023

ரோஜா பூ  செடி

ரோஜா பூ  செடி ரோஸ் செடியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு செடியாக இருந்தாலும் சரி செடிகளை வாங்கும்போது அதிகமாக துளிர்களை உள்ள செடிகளை மட்டும் தேர்வு செய்து வாங்கவும். ரோஸ் செடி வாங்கும் போது ஐந்து இலைகள் உள்ள செடிகளை தேர்வு செய்து வாங்கினால் ரோஸ் செடி நன்றாக வளரும்.  நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது. அதனுடன் இரண்டு இலைகளை சேர்த்து பறிக்க வேண்டும். அப்போது தான் ரோஸ் செடியில் அடுத்த துளிர்கள் விட்டு நன்கு வளர ஆரம்பிக்கும்.ரோஸ் செடிக்கு இயற்கை உரமாக வாரத்தில் ஒரு முறையாவது சமையலறை கழிவுகளான டீ தூள், காபி தூளி, வெங்காய தோல், பூண்டு தோல், முட்டை ஓடு மற்றும் மக்கக்கூடிய காகிதங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்ட்டிக் பேனரில் வைத்து மூடி வைக்கவும்.ஒரு வாரம் வரை தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு குச்சியால் கிளறி விடவும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையை ரோஸ் செடிக்கு உரமாக இட்டு வந்தால் ரோஸ் செடி செழிப்பாக வளரும்.ரோஸ் செடிக்கு வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றாமல் மண், ஊட்ட சத்துக்காக நம் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தின் நீரை மட்டும் வடிகட்டி தண்ணீராக ஊற்றலாம். இவ்வாறு ஊற்றுவதால் செடி நன்றாக வளரும்வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை ரோஸ் செடிக்கு ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.ரோஸ் செடிகளுக்கு உரம் வைக்கப்போகிறோம் என்றால் அன்று முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது. செடிகளுக்கு உரம் வைக்கும் போது மாலை நேரத்தில் வைத்தால் அதிக பலன் கிடைக்கும்..ரோஸ் செடிக்கு) வாரம் ஒரு முறையாவது இயற்கை டானிக் ஊற்றுவதால் செடி நன்றாக வளரும் அதுமட்டும் இன்றி பூக்களும் அதிகளவு பூக்கும்.இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு வாங்கி கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.இந்த பேனரில் கடலை பிண்ணாக்கை கொட்டவும். பின்பு 10 லீட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.பின்பு அந்த பேனரை காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைக்கவும். (காற்று உள்ளே சென்று விட்டால் அவற்றில் புழுக்கள் வைத்து விடும் எனவே காற்று புகாத அளவிற்கு பேனரை நன்றாக மூடிவைத்து கொள்ளவும்)ஐந்து நாட்கள் கழிந்து இந்த கலவையை திறந்து பார்த்தால் நன்றாக நுரைத்து இருக்கும். இந்த கலவையை ஒரு பக்கெட் அளவிற்று எடுத்து கொண்டு 10 லீட்டர் தண்ணீரில் கலந்து ரோஸ் செடி மற்றும் அனைத்து செடிகளுக்கும் தண்ணீராக ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

May 31, 2023

மாடிதோட்டம் அமைக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்

கிராமப்புறமாகஇருந்தாலும்நகர்புறமாகஇருந்தாலும்மாநகரங்களில்அடுக்குமாடிஅப்பார்ட்மெண்ட்டாகஇருந்தாலும்மாடியில்எல்லோரும்மாடித்தோட்டம்அமைக்கலாம்.மாடித்தோட்டங்களால்என்னநன்மைஎன்னவென்றால்வீட்டுக்குதேவையானகாய்கறிகள்,பூக்களைநீங்களேவிளைவித்துக்கொள்ளலாம்.ஒரு மாடிதோட்டம் அமைக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்என்பதைதெரிந்துகொள்ளுங்கள்., வெறும் மண்ணைதொட்டிகளில்நிரப்பிவைக்காதிர்கள்.மண்ணில்இயற்கைஉரங்கள்தேவை.அதற்காகமண்ணில்மக்கக்கூடியபொருட்களான,காய்ந்தஇலை,சமையலறைகழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றைஒன்றா ககலந்து 15 நாட்கள் வரை மண்ணைமூடி வைத்துவிடுங்கள்.பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணைதொட்டியில் தோட்டம்அமைப்பதற்கானபிளாஸ்டிக் பைகளில் நிரப்புங்கள். அதன்பிறகு,விதைகளைஅல்லது செடிகளை நடலாம். அப்போதுதான்மாடித்தோட்டத்தில்செடிகள் வளமாக வளரும்.கொஞ்சம் முயற்சிசெய்தால், செடிகளை வளர்ப்பதற்கு என்றே கோகோ பிட், பிளாஸ்டிக்பைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.மாடித்தோட்டத்தில்செடிகள் வளர்ந்த பிறகு, செடிகளுக்குதண்ணீர்ஊற்றும்போதுதண்ணீர் நிறைய ஊற்றாதீர்கள். நிலமாகஇருந்தால்நிறைய தண்ணீர் உற்றினால் உறிஞ்சுகொள்ளும். இது மாடித்தோட்டம்என்பதால்சிறிதளவு தண்ணீர் ஊற்றுங்கள். அதிகமாகதண்ணீர் ஊற்றினால்தண்ணீர் தேங்கி செடி அழுகிவிடும். அதனால், மாடித்தொட்டத்தில்செடிகளுக்கு குறைவாக தண்ணீர் ஊற்றுங்கள்.அதே போல, மாடித் தோட்டத்தில்செடிக்கு நினைத்த நேரங்களில்எல்லாம்தண்ணீர் ஊற்றாதீர்கள். காலையிலும் மாலையிலும் தண்ணீர்ஊற்றுங்கள். வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றினால் வெப்பம்அதிகம்ஆகி செடிகள் வெந்து காய்ந்துபோகவாய்ப்புள்ளது. அதனால், பகலில்குறிப்பாக வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றாதீர்கள்.ஆர்வத்தில், மாடித் தோட்டத்தை அமைத்துவிட்டு செடிகளுக்கு தண்ணீர்மட்டும்ஊற்றி வந்தால் போதாது. செடிகளை பராமரிக்க வேண்டும். மாடித்தோட்டத்தில்செடிகளைபூஞ்சைநோய்கள்தாக்குதலில்இருந்துபாதுகாக்க,இயற்கைஉரம்மற்றும்மருந்துக்களைதெளிக்கவேண்டும்.மாடித்தோட்டத்தில்ரசாயனமருந்துக்களைஎப்போதுமேபயன்படுத்தவேண்டாம்.மாடித் தோட்டத்தில் செடிகள் வளர்ந்தபிறகு, வாரத்தில் ஒரு முறைவேப்பம் பிண்ணாக்கு கரைச அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்துசெடிகள் மீது தெளித்தால் பூஞ்சை நோய் தாக்காது

May 23, 2023

வீட்டு தோட்டம்செடிகள் வளமாக வளர...

வீட்டு தோட்டம் பராமரிப்பு மண் தொட்டியில் உருவாகும் உப்புப்படுவை நீக்க, வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சரிசமமான அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்.இந்த கலவையை தொட்டியின் மீது தெளித்து, பிளாஸ்டிக் பிரஷை கொண்டு நன்றாக தேய்க்கவும். அதில் செடியை நடுவதற்கு முன், நன்றாக காய விடுங்கள். தோட்டவேலை பார்க்கும் பொது கண்டிப்பாக கால்களில் செருப்பு அணிந்து கொள்ளவேண்டும் மற்றும் கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வது மிகவும் நல்லது.ஏன் என்றால் தோட்டத்தை பராமரித்து கொண்டிருக்கும்போது ஏதாவது கால்களில் குத்திவிடலாம். கைகளில் கிளவுஸ் அணியாமல் தோட்டத்தை பராமரிக்கும்போது நகங்களில் மண் புகுந்துவிடும்.இதன் காரணமாக கூட உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும். செடிகளை ட்ரிம் செய்யும்கருவி பழுதடையாமலும்,உடையாமலும் பாதுகாக்க,அதனைபயன்படுத்துவதற்கு முன், அதன் மீது காய்கறி எண்ணெய்யை தெளித்திடுங்கள். சிலரது தோட்டத்தில் செடிகளில் பஞ்சி பூச்சிகள் தாக்குதல் இருக்கும் அவற்றை கண்டறிந்தது பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூரலாய் ஸ்பிரே செய்ய வேண்டும். குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும்.வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்.இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்குஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை. இதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட் வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும்.இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான் வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம்.இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும்.செடிகளின் அடிப்பகுதியில் வீட்டில் இருக்கும் சமையலறை கழிவுகளை பயன்படுத்தலாம். அதாவது காபி தூள். டீ தூள் மற்றும் மற்ற கழிவுகளை செடிகளுக்கு உரமாக இடலாம். இதன் மூலம் செடிகள் வளமாக வளரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News