ஹேர் டை ஆயில் தயாரிக்கும் முறை
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் இந்த நரைமுடியால் பலரும் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த முதுமை தோற்றத்தை பெறக் கூடாது என்பதற்காகவே நரைமுடியை மறைப்பதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுடைய அழகும் தலைமுடியும் பாலாய் போய்விடும். இந்த எண்ணெய் அதிக அளவில் கேரள மக்களால் பயன்படுத்தக்கூடிய எண்ணையாக திகழ்கிறது. இதில் பல மூலிகை பொருட்களை சேர்த்து எண்ணை தயாரித்திருப்பதால் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் விரைவிலேயே தலைமுடி பிரச்சனைகளும் நீங்கும், நரைமுடி பிரச்சனையும் நீங்கும்.
இதற்கு நமக்கு சில பவுடர்கள் தேவை. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல்லிக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் ஒரு டீஸ்பூன், செம்பருத்தி பவுடர் ஒரு டீஸ்பூன், நில ஆவாரை பவுடர் அரை டீஸ்பூன், மருதாணி பவுடர் 2 டீஸ்பூன், கருஞ்சீரகப் பவுடர் மூன்று டீஸ்பூன், கடுக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன், சீயக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கருஞ்சீரக பவுடர் என்று கிடைக்காது. அதனால் கருஞ்சீரகத்தை வாங்கி நன்றாக வறுத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 12 கிராம்பு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1/2 டீஸ்பூன் ஆளிவிதை, 1/2 டீஸ்பூன் சியாவிதைகள் இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து அதையும் இந்த பவுடர்களுடன் சேர்த்து விட வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இது மூழ்கி திக்காக ஹேர்டை பதத்திற்கு வரும் வரை தேவையான அளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இதை மூன்று நாட்கள் அப்படியே வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஹேர் டை ஆயில் தயாராகி விட்டது. இதை தினமும் தலைக்கு உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதை நாம் வடிகட்டுவது கிடையாது. மேலும் இதை நாம் நன்றாக கலக்கி விட்டு தலையில் தேய்ப்பதன் மூலம் இதில் இருக்கக்கூடிய அந்த பவுடர்கள் தலையில் அப்படியே தங்குவது போல் தோன்றும் என்பதால் தினமும் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக என்றைக்கெல்லாம் நீங்கள் தலைக்கு குளிக்கிறீர்களோ அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெயை நன்றாக தலையில் தடவி மசாஜ் செய்து ஊறவைத்து பிறகு குளிப்பது நல்லது. சளி பிடிக்காது என்று நினைப்பவர்கள் இரவே இந்த எண்ணெயை தலையில் தேய்த்து தலையை கவர் செய்து விட்டு மறுநாள் காலையில் எழுந்து கூட தலைக்கு குளிக்கலாம். ஒரு முறை தயார் செய்து வைத்தாலே போதும். தொடர்ச்சியாக நாம் இந்த எண்ணையை உபயோகப்படுத்துவதன் மூலம் விரைவிலேயே நரைமுடி என்பது கருமை ஆவதை உணர முடியும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த இந்த பொடிகளை நாமும் பயன்படுத்தி நம்முடைய நரைமுடிபிரச்சினையும்,தலைமுடிபிரச்சினையும்தீர்த்துக் கொள்வோம்.கொத்தமல்லி,கறிவேப்பிலை, வெந்தயகீரை வகைகளை உடனேஆய்ந்து காற்று வெளிச்சத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடமால் இருக்கும்.வெள்ளிப் பொருட்களைப் புளித்த தயிரில் ஊற வைத்துச் சுத்தம் செய்தால் பளீரென இருக்கும்.
0
Leave a Reply