கோதுமை மசாலா தோசை அடை
தேவையான பொருட்கள் :- ஒரு பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சீரகம், சேர்த்து பொரிந்தவுடன் 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கி சோத்து நன்றாக வதக்கவும், 2 பச்சமிளகாய் பொடியாக வெட்டி சேர்க்கவும். பின் சிறிதளவு இஞ்சி துருவி சேர்த்து, பொடியாக வெட்டிய கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிடவும், 1 சிறிய கேரட் துருவி சேர்த்து விட்டு வதக்கி மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சேர்த்து விட்டு இறக்கி ஆற வைக்கவும்.
செய்முறை - கோதுமை மாவு ஒன்றரை கப், அல்லது கேப்பை மாவு, அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன், பின் இத்துடன் வதக்கியவற்றை சேர்த்து அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு, உப்பு சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பொடியாக உடைத்த நிலக்கடலை சேர்த்து மல்லி இலை சேர்த்து தண்ணீர் விடாமல் கலந்து விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவு மாதிரி இல்லாமல் கொஞ்சம் லூசாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் எண்ணெய் தடவி ,உருண்டைகளை வைத்து நைஸாகத் தட்டி விட்டு (ரவுண்டாக) காய்ந்த தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் விட்டு, வாழை இலையில் அப்படியே பேனில் தட்டி விட்டு மெதுவாக வாழை இலையை எடுத்து விட்டு, இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு, எடுத்து வைக்கவும். இந்த அடைக்கு சைட்டிஷ் தேவையில்லை. தேவையானால் தேங்காய் சட்னி செய்து சாப்பிடலாம். சுவையான சத்தான தோசை அடை ரெடி.
0
Leave a Reply