25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியல்

Barclays-Hurun India-வின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2024 பட்டியலின்படி, அம்பானி குடும்பத்தின் மதிப்பு ரூ. 25.75 டிரில்லியன் (ரூ.25,750,000,000,000) ஆகும்.இதுஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 10 சதவீதம் ஆகும்.

பார்க்லேஸ்ஹுருன் இந்தியா அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையின் கீழ் அம்பானி குடும்ப வணிக சாம்ராஜ்யம் ஆற்றல், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் செயல்படுகிறது. 

பார்க்லேஸ்ஹுருன் இந்தியாவின் இந்த தரவரிசை மார்ச்20,2024 வரையிலான நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.இந்த மதிப்பீட்டில் தனியார் முதலீடு மற்றும் திரவ சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

அம்பானியின் செல்வத்தின் மதிப்பில் ரிலையன்ஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்கள், ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் பிற குழும நிறுவனங்களின் பங்குகளும் அடங்கும். அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது.

 மதிப்புமிக்க குடும்ப வணிகத்தின் பட்டியலில் ரூ.7.13 டிரில்லியன் மதிப்புடன் பஜாஜ் குடும்பம் இரண்டாவது இடத்தில் உள்ளது.புனேவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் வணிகத்தின் தலைமைப் பொறுப்பை குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை தலைவரான நீரஜ் பஜாஜ் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.5.39 டிரில்லியன் மதிப்பீட்டில் பிர்லா குடும்பம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த குமார் மங்கலம் பிர்லா செய்கிறார்.இந்த நிறுவனம் உலோகம், சுரங்கம், சிமெண்ட் மற்றும் நிதி சேவைகளில் கவனம் செலுத்துகிறது.

அறிக்கையின்படி, அம்பானி, பஜாஜ் மற்றும் பிர்லா ஆகிய மூன்று குடும்பங்களின் வணிகங்களின் கூட்டு மதிப்பீடு460 பில்லியன் டொலர்கள், இதுசிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கிட்டத்தட்ட சமம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News