சர்க்கரை இல்லாத இயற்கை சுவையுடன் வீகன் ஐஸ்க்ரீம்
தாவரம் மற்றும் அதை சார்ந்த உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் வீகன் என்று அழைக்கப்படுகிறார்கள். பால் சார்ந்த பொருள்களையும் வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் சாப்பிடுவதில்லை. அந்த வகையில் வீகன் டயட்டை பின்பற்றுபவர்களும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பால் சேர்க்காமல் வெறும் காய்கறிகளை வைத்து ஐஸ்க்ரீம் தயார் செய்து சாப்பிடலாம்.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்தும், வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும் பழரசம், உடலை குளிர்ச்சியாக வைக்கும் உணவுகள் என பலவற்றை நாம் எடுத்துக்கொள்வதுண்டு. அந்த வகையில் ஐஸ்க்ரீம்களும் கோடையின் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குளிர்விக்கும் டெஸ்ஸர்ட் வகை உணவாக இருந்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக ஐஸ்க்ரீம் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக அதில் பால் சேர்க்கப்படுவதும், அதிக அளவில் சர்க்கரை இருப்பதாலும்தான். இவற்றுடன் அதன் குளிர்ச்சியான தன்மை சாப்பிட்டதுடன் உடலுக்கும், மனதுக்கு இதமான உணர்வை தருகிறது.
கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாகவும், வீகன் பிரியர்கள் சாப்பிடும் விதமாகவும் இருந்து வரும் சில வீகன் ஐஸ்க்ரீம் வகைகளை பார்க்கலாம்.உடலுக்கும், மனதுக்கு குளிர்ச்சி தரும் வீகன் ஐஸ்க்ரீம் வகைகள் சிலவற்றை பார்க்கலாம்.
0
Leave a Reply