25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


வெங்காயத்தின் மேல் தோல் எளிதாக அகல
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெங்காயத்தின் மேல் தோல் எளிதாக அகல

சாம்பாரில் உப்பு அதிகம் போட்டுவிட்டால் இரண்டுஉருளைக் கிழங்குகளை வேகவிட்டுத் துண்டு செய்து அதில் போட்டால் அதிகப்படியாக உள்ள உப்பைக் கிழங்கு கிரகித்துக் கொண்டு விடும்.

குழம்பு போதிய அளவுக்குக் கொதித்து விட்டன என்பதற்கு அறிகுறி மிளகாய்ப் பொடியின் நெடி அடங்கி மேலே நுரைத்துக் கொண்டு வருவதுதான்.

எலுமிச்சம் பழத்தைச் சற்று நேரம் வெந்நீரில் போட்டு எடுத்துச் சாறு பிழிந்தால் நிறையச் சாறு வரும். பிழிவதற்கும் சுலபமாக இருக்கும்.

வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்று விடும்.

சர்க்கரை சேர்த்துத்  தயாரிக்கப்படும் தின்பண் டங்களுக்கு நிறத்துக்காக கேசரி பவுடர் சேர்க்கலாம். வெல்லம் போட்டுத் தயாரிக்கும்போது இது வேண்டியதில்லை சேர்த்தாலும் நிறம் தராது . வெல்லத்  தயாரிப்புகளுக்கு நெய் சேர்ப்பதால் அதன் ருசியும் மணமும் கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News