வித்தியாசமான சுவையில் வெஜிடபிள் போளி
போளி செய்யும்போது வழக்கமாக தேங்காய் பூரணம் அல்லது கடலைப் பருப்பு பூரணம் உள்ளே வைப்போம் அதற்கு பதிலாக துருவிய கேரட்டுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து பூரணமாக்கி போளி செய்தால் வித்தியாசமான சுவையில் வெஜிடபிள் போளி ரெடி.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சு வையாக இருக்கும்.
பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும். காய்கறிகள்சமைக்கும்போது பார்லி பவுடரைசிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போதுஅதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்
0
Leave a Reply