25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

தினமும் ஐந்து முறை நிறம் மாறக்கூடிய சிவலிங்கம், வண்டு துளைத்த லிங்கம், உலகை சமநிலைப் படுத்த அகஸ்தியர் தென் திசைக்கு வர அவருக்கு கல்யாண சுந்தரராக திருமண காட்சியை காட்டிய திருத்தலம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தஞ்சாவூர், திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் 

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் விபரம்

மூலவர் - கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)

அம்மன்/தாயார் - கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி

உற்சவமூர்த்தி - கல்யாண சுந்தரேஸ்வரர்

விருட்சம் - வில்வம்

தீர்த்தம் - சப்தசாகரம்

புராணபெயர் - திருநல்லூர்

அமைந்துள்ளஇடம்: தஞ்சாவூர் நல்லூர்

கோயில் திறக்கும் நேரம் - காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 வரை

மாலை 5.30 மணி முதல் இரவு 8 வரை

இந்ததிருக்கோயில் அப்பர், சம்பந்தர் பாடல்பெற்ற சிவாலயம் ஆகும். அமர்நீதிநாயனாரை ஆட்கொண்டதும், அப்பருக்கு திருவடி சூட்டிய பெருமைகொண்டது. தேவாரப் பாடல் பெற்றதிருத்தலம். இந்த கோயில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் திருநல்லூரில் அமைந்துள்ளது.

கோயில்முன் குளமும், ஐந்து நிலைகள் கொண்டராஜ கோபுரம் உள்ளது. கோயில்வெளிப்பிரகாரத்தில் நதவனம், மடப்பள்ளி, விநாயகர், நடராஜர் சன்னதி, மகாகாளியம்மன் சன்னதி, கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ணன் லிங்கம், சுமதி லிங்கம், வருணலிங்கம், விஷ்ணு லிங்கம், பிரமலிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

மூலவர் அமைந்திருக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் சிலைக்கு பின் இருக்கும் கல்யாண சுந்தரர் சிலை சுதை சிற்ப வடிவில் உள்ளன.சுதை - சுண்ணாம்பு, களிமண் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட விக்ரகம்.சப்தஸ்தானம் எனும் ஏழுர்த்தலங்களில் திருநல்லூர், திருப்பாலைத்துறை, மட்டியான்திடல், பாபநாசம்,கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், ஆகிய தலங்களாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது சிறப்பு. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும்.

ஆதிசேஷணுக்கும், வாயு பகவானுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின்போது கயிலை மலையிலிருந்து வாயுவால்வீசி எரியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றுதான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மற்றொரு சிகரம் சுந்தரகிரி எனப்படுகிறது.அப்பர் என அழைக்கப்படும், குந்தி தேவி பூஜித்து பேறுபெற்ற திருத்தலம்.முசுகுந்தன் இந்திரனிடமிருந்து பெற்ற திருவாரூரில் தற்போதுஇருக்கும் தியாகராஜ பெருமானை, இந்த தலத்தில் மூன்றுநாட்கள் வைத்து பூஜித்து, பின்னர்திருவாரூரில் பிரதிஷ்டை செய்தார்.

லிங்கத்தின்மீது துளைகள்.பிருங்கு முனிவர்வண்டு வடிவில் வந்து இறைவனைவழிபட்ட ஆலயம்.வண்டு வடிவில்இறைவனை வலம் வந்து வழிபட்டார். இதன் காரணமாக இந்த சிவலிங்கத்தின்மீது சில துளைகள் காணப்படுகின்றன.திருவெண்டுறை என அழைக்கப்படும் திருவண்டுதுறைவண்டுறை நாதர் கோயிலின் வரலாறும்இதையே கூறுகின்றது.

இங்கு வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றினார்.பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.தாமிர நிறம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்க நிறம், நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சி தந்து அருள் தருவதால் இவருக்கு பஞ்சலிங்கேசர் என பெயர் பெற்றுள்ளார்.இந்த கோயிலில் அமர்நீதி நாயனாருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். இது குறித்த பிரதிமைகள் கற்சிலைகளும், செப்பு சிலையும் உள்ளன.இங்கு சோழர் கால 22 கல்வெட்டுகள், ஒரு முஹய்சரர் கல்வெட்டு என 23 கல்வெட்டுகள் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News