மிக்ஸி ,கிரைண்டர் சுத்தம் செய்ய
எண்ணெய் பாட்டிலை கையாளும் பொழுது திடீரென கை தவறி எண்ணெய் கீழே சிந்திவிட்டால் உடனே யோசிக்காமல் அதன் மீது கோலப் பொடியை தூவி விடுங்கள். பிறகு துடைத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட எண்ணெய் பசை இல்லாமல் அழகாக வந்து விடும்.
மிக்ஸி ,கிரைண்டர் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்யும் பொழுது பழைய டூத் பிரஷில், டூத் பேஸ்ட் கொஞ்சமாக வைத்து தேய்த்து கழுவி பாருங்கள், புதியது போல பளிச்சென இருக்கும்.
துணி காயப் போட நைலான் கயிறை வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கியவுடன் முதலில் கொஞ்சம் சோப்பு நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அலசி பயன்படுத்திப்பாருங்கள். நீண்ட நாட்கள் அறுந்து போகாமல் இருக்கும்
உரிக்க வேண்டிய பூண்டு எல்லாம் ஒரு துணியில் போட்டு மூட்டை மாதிரி கட்டி எடுத்து கொள்ளுங்கள். நாம் காய் சீவும் சீவலில் இந்த பூண்டு ,மூட்டையை லேசா தேய்தால் போதும் உள்ள இருக்கும் பூண்டு எல்லாம் தோல் உரித்து வந்து விடும். இந்த முறையில் எவ்வளவு பூண்டு இருந்தாலும் இனி அசால்டா உரிச்சி எடுத்துடலாம்.
பச்சைக்கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி. போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும், அதிகமாகும்.
0
Leave a Reply