ஐவ்வரிசி கார வடை
தேவையான பொருட்கள் :- ஐவ்வரிசி 100 கிராம் அரிசி மாவு 75 கிராம், புளித்த மோர் அரை கப், காரப் பொடி 2 டீ ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை - ஐவ்வரிசியைப் புளித்த மோரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஐவ்வரிசி நன்கு ஊதிய பிறகு அதனுடன் அரிசி மாவு, காரப் பொடி, பெருங்காயப் பொடி மற்றும் உப்பு தூள் போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். மாவு உருட்டிப் போடும் பதத்தில் இருக்க வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் போட்டு எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். மாவை வடைபோல் தட்டிக் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த வடையைச் சுவைக்க மிகவும் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply