வாழைப்பழ இனிப்பு வடை
தேவையான பொருட்கள் - வாழைப்பழம் நாட்டுப்பழம் 2, சீனி 400 கிராம், பால் 200 கிராம்,ரவை 400 கிராம், தேங்காய் ஒரு கப், ஏலக்காய் சிறிதளவு, ரீபைன்ட் ஆயில், பொரிப்பதற்கு
செய்முறை - பாலில் சீனியையும் ரவையையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய் பூ, வாழைப்பழம், ஆகியவற்றை ரவையுடன் ஏலக்காயும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவை சிறிது சிறிதாகப் போடவும், சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். மிகவும் சுவையாக இருக்கும். வாழைப்பழம் போட்டு பிசைந்தவுடன் எண்ணையில் பொரித்து எடுத்து விட வேண்டும். இல்லையெனில் மாவு நீர்த்து விடும்.
0
Leave a Reply