வாழைக்காய், கீரை வடை
தேவையான பொருட்கள்: வாழைக்காய் சிறியது 2, ஏதாவது ஒரு கீரை சிறியகட்டு, மிளகாய் 6, இஞ்சி ஒரு துண்டு, கொத்தமல்லி கருவேப்பிலை வெட்டியது, வெங்காயம் 1 பெரியது, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை - வாழைக்காய் வேக வைத்துக் கொண்டு, பொடிமாசிற்குத் துருவுவது போல் துருவிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், கீரை முதலியவைகளைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பையும் போட்டு கெட்டியாகப் பிசைந்து வடை தட்டி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும். தயிரில் போட்டுத் தயிர் வடையாகவும் சாப்பிடலாம்.
0
Leave a Reply