25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


ஜிலேபி ( Jilebi ).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜிலேபி ( Jilebi ).

தேவையான பொருட்கள் : 1கப்உளுந்து, 1கப் சர்க்கரை, 1/2கப் தண்ணீர் ,சிறிதுஆரஞ்சு கலர், 

எண்ணெய் பொரிப்பதற்கு

 

செய்முறை : 

ஜிலேபிக்கு என்று தனியாக உளுந்து கிடைக்கிறது .இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும் அதை வாங்கி பயன்படுத்தவும்.

உளுந்தை நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும்.

பின் கிரைண்டரில் போட்டு சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாக ஆட்டி எடுக்கவும்.

அதில் ஆரஞ்சு புட் கலர் ஐ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பிசுபிசுப்பு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

மஸ்லின் துணியில் நடுவில் சிறிது துளையிட்டு துணியை கோண் போல் மடித்து கட்டி கொள்ளவும்.

பின் அதில் மாவை நிரப்பி வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன சின்ன ஜிலேபியாக பிழிந்து விடவும்.

திருப்பி விட்டு இரண்டு புறமும் வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் நான்கு அல்லது ஐந்து நிமிடம் வரை ஊறவிட்டு பின் தனியாக தட்டில் வைக்கவும்.புதிதாக முயற்சி செய்பவர்கள் கெட்சப் பாட்டில் அல்லது ஐசிங் நாசில் கொண்டு பயப்படாமல் செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News