25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வைட்டமின் அதிகமாக இருக்கும் கத்திரிக்காய்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வைட்டமின் அதிகமாக இருக்கும் கத்திரிக்காய்..

கத்திரிக்காயில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கிறது.கத்திரிக்காய் கருப்பு, ஊதா, வெள்ளை என பல நிறங்களிலும் கடைகளில் கிடைக்கிறது. அதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

வைட்டமின்C,வைட்டமின்A,வைட்டமின்E, வைட்டமின்K மற்றும் வைட்டமின்B காம்ப்ளக்ஸ் போன்றவை உள்ளன.கத்திரிக்காயில் வைட்டமின் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினை போக்கும்.
இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Polyphenols) உள்ளன, இது செல்களின் சேதத்தைத் தடுக்கிறது.
பிஞ்சு கத்திரிக்காய் சாப்பிட்டால் வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய், சளி, கீழ்வாதம், பித்தம், மலச்சிக்கல், தொண்டைக்கட்டு, உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் போக்கும்.

கத்திரிக்காயில் வைட்டமின் பி அதிக அளவு உள்ளதால் நாம் உண்ணும் உணவு விரைவாகவே சத்தாக மாற அது உதவுகிறது.
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன.

இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உடலில் அரிப்பு ஏற்படும் என்பதற்காக முத்திய கத்திரிக்காயை முற்றிலுமாகவே தவிர்க்க முடியாது ஏனெனில் முத்திய கத்திரிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் உடலின் வளர்ச்சிக்கு அது பயன்படும்.கத்திரிக்காய் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.

இரத்தஅழுத்தத்தைசீராகவைத்து,இதயநோய்அபாயத்தைக்குறைக்கஉதவுகிறது.அதேநேரம் உடலில் சொறி சிரங்கு புண் உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.அதேபோல் கத்தரிக்காய் வற்றல் சாப்பிட்டால் உடம்பு சூடாகும். மேலும், கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும் என பலரும் நினைக்கிறார்கள்.உண்மையில் முத்திய பெரிய கத்திரிக்காய் சாப்பிட்டால் மட்டுமே அந்த பிரச்சினை வரும்.பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு நன்மையே தரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News