உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை மணிஷாவுக்கு தங்கம்.
கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரீஸ்டைல் 59 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அபிகெய்ல் எலிசபெத்தை மணிஷா எதிர்கொண்டார்.
போட்டியின் இரண்டாவது பீரியடில் அதிரடியாகச் செயல்பட்ட மணிஷா, விடாமுயற்சியுடன் போராடி 7 புள்ளிகளைப் பெற்றார். இறுதியில் 8-6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் உலக சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை மணிஷா படைத்தார்.
0
Leave a Reply