25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


தேங்காய் ரவா பர்ஃபி (Rava Coconut Burfi).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேங்காய் ரவா பர்ஃபி (Rava Coconut Burfi).

தேவையான பொருட்கள் -

ரவை - 1 கப் (1/2 கப் அல்லது 1 கப் உங்களது அளவுக்கு ஏற்ப),

தேங்காய் -1 கப்,

சர்க்கரை - 3/4 கப்,

நெய் - 1/4 முதல் 1/2 கப்,

பால் - 1/2 கப் (அல்லது தண்ணீர் 3/4 கப்),

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி,

முந்திரி, பாதாம் - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது).

 

செய்முறை -

கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் ரவையைப் போட்டு, வாசனை வரும் வரை மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த ரவையுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் அல்லது பால் சேர்த்து மிதமான சூட்டில் சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்கவும். (கம்பிப் பாகு பதம் தேவையில்லை, சர்க்கரை கரைந்து லேசான பிசுபிசுப்புத் தன்மை வந்தால் போதும்).

கொதிக்கும் சர்க்கரை பாகில் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் தேங்காய் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியில்லாமல் சேர்த்துக் கிளறவும்.

இதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். கலவை கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் பதம் வர வேண்டும்.

நெய் தடவிய ஒரு தட்டில் அல்லது ட்ரேயில் இந்தச் சூடான கலவையைப் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.

மேலே வறுத்த முந்திரி, பாதாம் தூவி லேசாக அழுத்தி விடவும்.

10 நிமிடங்கள் ஆறவிட்டு, உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக (Burfi) வெட்டிப் பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News