25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அரிசி கழுவிய நீரில் முருங்கைக்கீரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அரிசி கழுவிய நீரில் முருங்கைக்கீரை.

கர்ப்பப்பை கோளாறு குணமாக-  தினசரி ஒரு நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் நெல்லி  ரத்தத்தை சுத்தமாக்கித் தருகிறது.

சுகபிரசவம் ஆக குங்குமப் பூவை வெற்றிலை பாக்குடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

மாதவிலக்கில் ரத்தப் போக்கு நிற்க: இலவங்கப்பட்டையை பொடி செய்து இரண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட வேண்டும்.

மலச்சிக்கல் தீர முட்டைக்கோஸை பொடிபொடியாக அரிந்து, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து சூப் வைத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் குடிக்கவும்.

நன்கு பசி எடுக்க இஞ்சி, கிராம்பு, சோம்பு இவைகளை வாயில் போட்டு மென்ற வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.

பல் வலி தீர: மிளகுத் தூளுடன் உப்புசேர்த்து பல் துலக்கவும். மிளகுத் தூளுடன் கிராம்புத் தைலம் சேர்த்து பல் ஈறுகளில் தடவலாம்.

கெட்ட கொழுப்பு கரைய: பசலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து கூட்டு அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை சரியாக: வெந்தயம், நாவல் கொட்டை, நெல்லி ஓமம் இவைகளை சேர்த்து  பொடியாக்கி வெந்நீரில் கலந்து இரண்டு வேலையும் குடிக்கவும்.

காயங்கள் ஆற: வேப்ப மரத்தின் கொழுந்து இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து காயங்கள் அல்லது புண்கள் மீது தடவ  வேண்டும்.

அரிசியை இரண்டாவது முறை கழுவிய நீரில் முருங்கைக்கீரை, உப்பு, தக்காளி, சின்ன வெங்காயம் சேர்த்து குக்கரில் வைக்கவும். ஒரு விசில்விட்டு இறக்கி, நீரை வடிகட்டி குடித்து வந்தால்,உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பப்பாளி இலைகளை அரைத்து கை,கால் குடைச்சலுக்கு பற்று போட்டு, வெந்நீரில் கழுவி வர வலி குறையும், 2.மாம்பழ துண்டுடன் தேன், குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், பால் ஆகியவை சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News