25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும்தேங்காய் பூ.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும்தேங்காய் பூ.

தேங்காய் பூ, ருசியாக இருக்கும். இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. தேங்காய் பூவில், மிக அதிக ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும். பருவ காலதொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை கொடுக்கும்.

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்போர், தேங்காய் பூவை சாப்பிட்டால், முழு எனர்ஜி கிடைக்கும். ஜீரண சக்தி குறைவாக இருந்தால், தேங்காய் பூ சாப்பிடலாம். இதிலுள்ள, மினரல் வைட்டமின், குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது.

இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால், ரத்தத்தில் அதிகப்படியானசர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் படியும் கொழுப்பை, கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டிருப்போர், தேங்காய் பூவை சாப்பிட்டு வர, தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பைகுணப்படுத்துகிறது.

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில், குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால், கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கும். 

சிறுநீரக தொற்று நோய்களை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகத்தின்  ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 

சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவற்றை நம்மை நெருங்காமல். முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சூரியனால் உண்டாகும் சரும  பாதிப்புகளையும் தடுக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News