சீனாவில், ஆசிய பாட்மின்டன்
சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-10, 21-9 என மக்காவின் லியோங், வெங் சி ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-12 என மக்காவ் வீரர் பாங் போங் புய்யை வென்றார். பெண்கள் ஒற்றையரில் இந்தியா வின் மாளவிகா 21-15, 21-9 என மக்காவின் ஹாவோவை சானை தோற்கடித்தார்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-9 என மக்காவின் புய் சி சோன், வோங் கோக் வெங் ஜோடியை வென் றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-5 என மக்காவின் வெங்சி, புய் சிவா ஜோடியை வீழ்த்தியது.
முடிவில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.
0
Leave a Reply