25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தலைவலி, தலை பாரம் குணமாக தும்பைப் பூ.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலைவலி, தலை பாரம் குணமாக தும்பைப் பூ.

தும்பை பூ செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது. நாள்பட்ட மார்பு சளி குறைக்க கூடியது தும்பைப்பூ. தும்பை பூவை சட்னியாக செய்து சாப்பிட்டால் மார்புச்சளி நீங்கும்.

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. எந்த விதமான விஷ பூச்சிகள், விஷ ஜந்துக்கள் கடித்தாலும் தும்பைப்பூவும், தும்பை இலையும் அதன் விஷத்தை முறித்து விடும்.

தும்பைப்பூ மற்றும் தும்பை இலைகளை சம அளவு எடுத்து சுத்தம் செய்து, அம்மியில் வைத்து நசுக்கி சாறு எடுத்து, அந்தச் சாற்றில் கால் அவுன்ஸ் வடிகட்டி குடிக்க வேண்டும். அதே பூவையும், இலையையும் அரைத்து பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் விஷம் முறிந்துவிடும்.

தும்பைப்பூவை சுமார்50 கிராம் அளவில் சேர்த்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெய்யில் போட்டு தைலமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இநதத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்.

உலர்ந்த தும்பைப் பூ50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், பூண்டு, சித்தரத்தை ஆகியவை தலா10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்தையும் நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பு தோன்றும்போது இந்த எண்ணெய்யில் 2 துளிகள் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்.
தலைவலி, தலை பாரம் குணமாக சிறிதளவு தும்பைப் பூவைச் சேகரித்து, அதனை பசும்பால் விட்டு அரைத்து ஒரு துணியில் தடவி, அதை நெற்றிப் பொட்டின் மீது வைத்தால் தலைவலி குணமாகும். நெற்றியிலும் துணியைப் போட்டு வைத்து தலைபாரம் இறங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News