25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நரம்புகள் வலிமை பெற மாதுளம் பூ.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரம்புகள் வலிமை பெற மாதுளம் பூ.

மாதுளம் பழத்தை விட மாதுளம் பூவில் அதிக அளவிலான நன்மைகள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளம் பூவில் இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

தண்ணீரைக் கொதிக்க வைத்து பிறகு மாதுளம் பூவை நன்கு கசக்கி சாறை பிழிந்து இந்த தண்ணீரை வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டை புண் நீங்கும்.

மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் இரத்த விருத்தி அதிகமாகும். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். மாதுளம் பூ, கசகசா, வேப்பம் பிசின் ஆகியவற்றை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு  வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து வருவது விரைவில் நிற்கும்.

அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம், வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது  மிகவும் நல்லது. அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.

மாதுளம் பூக்களை உலர்த்தி, பின்னர் பொடியாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும், ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாட்களில் இருமல் குறையும். மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து, சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் நரம்புகள் வலிமை பெறும். குறிப்பாக நரம்புத் தளர்ச்சியினால்அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல அருமருந்து. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News