அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் சர்வ சமுத்ர அக்ரஹாரம், இராஜபாளையம். நவராத்திரி உற்சவம் (03.10.2024-12.10.2024)
புரட்டாசி மாதம் 17-ம் தேதி (03-10-2024) வியாழக்கிழமை முதல் புரட்டாசி மாதம் 26-ம் தேதி (12-10-2024) சனிக்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தசதீ பாராயணமும், அம்பாளுக்கு அபிஸேகமும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
.நவராத்திரி நன்னாளில் கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்கள்.
நாள்,கிழமை,அலங்காரம்
03.10.2024 வியாழக்கிழமை - ப்ராஹ்மீ
04.10.2024 வெள்ளிக்கிழமை-புவனேச்வரீ
05.10.2024 சனிக்கிழமை -கோவிந்த ரூபிணீ
06.10.2024 ஞாயிற்றுக்கிழமை - ஐந்த்ரீ
07.10.2024 திங்கள்கிழமை - மாஹேச்வரீ
08.10.2024 செவ்வாய்க்கிழமை -கௌமாரீ
09.10.2024 புதன்கிழமை - வைஷ்ணவீ
10.10.2024 (துர்க்காஷ்டமி)வியாழக்கிழமை - மஹிஷாசுரமர்த்தினி
11.10.2024 (சரஸ்வதீ பூஜை) வெள்ளிக்கிழமை - மஹாஸரஸ்வதீ
12.10.2024 (விஜயதசமி) – சனிக்கிழமை,மாலை 6 மணிக்கு காலபைரவர் அபிஸேகம்.
அனைவரும் வளமும், நலமும் மன அமைதியும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம்.
ஸப்தஸதீ பாராயணம் நாளொன்றுக்கு சிறப்பு ஸங்கல்பத்திற்கு ரூ 1000/-
நவராத்திரி சிறப்பு பூஜைக்கு நாளொன்றுக்கு ரூ 2000/- மேலும் பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளும் பூஜா திரவ்யங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது - 9003273690 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).
இப்படிக்கு பி. ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்.
0
Leave a Reply