25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஒருநாள் கிரிக்கெட் தொடர்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒருநாள் கிரிக்கெட் தொடர்,

இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 'ஏ' அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இலங்கை 'ஏ' அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு இலங்கை வீரர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை 'ஏ' அணி தொடரில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News