பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரா ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் ரத்தன் டாடா வெளியிட்ட அறிக்கையில்‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் ரத்தன் டாடா, மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.09) இரவு, 11.30மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஓய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர் களுக்கு முன்னோடியாகவும் உலகஅரங்கில் திறமையான திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
ரத்தன் டாடாவின் இறப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த பங்களிப்பு செய்து தொழில்துறையின் டைட்டனாக விளங்கிய அவர் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுவார். ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைட்டும்'' என கூறியுள்ளார்.ல்,‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது.இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
0
Leave a Reply