மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா 10.10.2024 வரை 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை திட்டமிடப்பட்டு மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழாவிற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகள் வர விரும்புவதாலும், கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்காகவும் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று மேலும் மூன்று நாட்கள் 10.10.2024 வியாழக்கிழமை மாலை வரை புத்தகக் காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply