25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாட்மின்டன் இரட்டையர் தரவரிசையில் திரீஷா–காயத்ரி ஜோடி 27-வது இடத்துக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாட்மின்டன் இரட்டையர் தரவரிசையில் திரீஷா–காயத்ரி ஜோடி 27-வது இடத்துக்கு முன்னேற்றம்.

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.) சார்பில், பாட்மின்டன் வீரர், வீராங்கனைகளுக்கான புதிய உலகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் டெல்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில், உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திரீஷா–காயத்ரி ஜோடி பங்கேற்றது.

இந்திய ஜோடி, தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த ஜப்பான் ஜோடியையும், 4-வது இடத்தில் இருந்த சீன ஜோடியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்தது. இதன் காரணமாக திரீஷா–காயத்ரி ஜோடி 39-வது இடத்தில் இருந்து 27-வது இடத்துக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து 10-வது இடத்தில் தொடர்ந்து உள்ளார். உன்னதி 25-வது இடத்திலும், தான்வி 26-வது இடத்திலும் உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 2 இடங்கள் முன்னேறி, ‘டாப்-20’ பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென் 13-வது இடத்துக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News