IRCTC புதிய இணையதளம்: டிக்கெட் முன்பதிவு வேகம் பல மடங்கு உயர்வு.
ரயில் பயணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதளம் வரும் 15-ஆம் தேதி அறிமுகமாகிறது. இதன் மூலம், தட்கல் உள்ளிட்ட ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
புதிய அமைப்பில், நிமிடத்திற்கு 32 ஆயிரமாக இருந்த முன்பதிவு திறன் 1.5 லட்சமாக அதிகரிக்கிறது. மேலும், முன்பதிவின்போது CAPTCHA சரிபார்ப்பு தேவையில்லை. பயணிகள் உதவிச் சேவைகளையும் அதிகளவில் ஒரே நேரத்தில் பெறும் வகையில் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply