வெற்றிலை நல்ல மருத்துவ மூலிகை
திருமண விசேஷங்கள் தொடங்கி அனைத்து விசேஷங்களில் விருந்துகளில் வெற்றிலை முதன்மை ஒன்றாக பார்க்கப்படுகிறது. . சாதாரண வெற்றிலை, கற்பூர வெற்றிலை, கம்மாறு வெற்றிலை என வெற்றிலையில் மூன்று வகைகள் உள்ளன.. இது நல்ல மருத்துவ மூலிகை .
குழந்தை பெற்ற சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் இருப்பவர்களுக்கு தேவையான பால் சுரக்க, வெற்றிலையை எடுத்து, அனலில், நெருப்பில் வாட்டி மார்பகங்களின் மேல் வைத்துக் கட்டி கொண்டால் தாய்ப்பால் சுரக்கும். கிராமங்களில் இன்றும் இம்முறையை தான் கடைப் பிடித்து வருகிறார்கள்.
மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கிச் சாறு எடுத்து சாற்றில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு, நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்து போகும்..
வெற்றிலையில் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கும். வெற்றிலைச் சாற்றில் உள்ள பினாலிக் கலவைகள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறனைக் கொண்டு இருக்கிறது.
நீரிழிவு நோய்க்கு வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள் உண்டு. வெற்றிலை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.ஆறாத கட்டிகளையும் வெற்றிலை குணமாக்கும். 4 முதல் ஐந்து வெற்றிலையை நெருப்பில் காட்டினால் வதங்கிவிடும். அது, கூடவே கொஞ்சம் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, கட்டிகள் மேல் வைத்து கட்டிவிடவும். இப்படி செய்வதால் கட்டிகள் உடைந்து குணமாகும்.
கம்மார் வெற்றிலை இரண்டெடுத்து நன்றாகக் கழுவிவிட்டு, அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் வைத்து வாயில் போட்டு நன்கு மென்று விழுங்குங்கள். சிறிது நேரம் கழித்து வெந்நீர் குடியுங்கள். அஜீரணம் அகன்று, நன்கு ஜீரணமாகும்.
மயக்கத்தை தெளிவிக்கும்.காதுவலிகளை போக்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசத்தை நலமாக்கும்.தொடர் இருமலால் ஏற்படும் மூச்சிரைப்பை போக்கும்.தேளின் விஷத்தை நீக்கும்.
0
Leave a Reply