25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 20, 2025

நோய் வராமல் இருக்க  தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

1. நீரிழிவு நோய் - இரவில் தாமதமாக சாப்பிடுவது 2. உயர் இரத்த அழுத்தம் - அதிக உப்பு பயன்படுத்துதல் 3. ஒற்றைத் தலைவலி - உணவைத் தவிர்ப்பது. 4. இரத்த சோகை - உணவுடன் தேநீர் அருந்துதல். 5. அமில ரிஃப்ளக்ஸ் - உணவுக்குப் பிறகு படுத்துக் கொள்ளுதல். 6. இரைப்பை அழற்சி - மிக வேகமாக சாப்பிடுதல். 7. இதய நோய் - உடல் செயல்பாடு இல்லாமை. 8. ஆஸ்டியோபோரோசிஸ் - சூரிய ஒளியைத் தவிர்ப்பது. 9. பதட்டம் - தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல். 10. இரவு நேர டிவி - திரையைப் பயன்படுத்தி தூக்கமின்மை. 11. டிமென்ஷியா - மணிக்கணக்கில் டிவி பார்ப்பது. 12. சிறுநீரக கற்கள் - குறைவாக தண்ணீர் குடிப்பது. 13. வைட்டமின் டி குறைபாடு - வீட்டிற்குள் இருப்பது. 14. கல்லீரல் பிரச்சினை - பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல். 15. ஆஸ்துமா - தூசி நிறைந்த சூழலில் இருப்பது.

Sep 20, 2025

2025 செப். 21ல் வருகிறது சூரிய கிரகணம்.

 சூரிய கிரகணம் இந்த ஆண்டின் கடைசி 2025 செப். 21ல் நிகழ்கிறது. இந்தியாவில் இதை பார்க்க இயலாது. தெற்கு அரைக்கோள பகுதிகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக் உள்ளிட்ட இடங்களில் இதுதெரியும். சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, நடுவில் வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் நிலவின் நிழல் பூமியில் விழும். இதுதான் சூரிய கிரகணம். அமாவாசை தினத்தில் தான் சூரிய கிரகணம் நடைபெறும். அடுத்த சூரிய கிரகணம் 2026 பிப்.17ல் நிகழ உள்ளது.

Sep 19, 2025

இந்தியா உலகின் இரண்டாம் பெரிய சக்தி நாடாக மாறுவது உறுதி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்  என்று கூறினார்.

அமெரிக்காவை விட இன்று அனைத்து நாடுகளும் இந்தியாவை நோக்கி வருகின்றன. சிங்கப்பூர்,  மொரீசியஸ், நெதர்லாந்து யூஏஇ. ஜப்பான் , சைப்ரஸ், யுகே , ஜெர்மனி உள்ளிட்டவை கணினி  மென்  பொருள்  ஹார்ட்வேர், ஆட்டோமொபைல், தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்ய தயாராக உள்ளன கடந்த 25 ஆண்டுகளில் சிங்கப்பூர் மட்டும்$174பில் லியன் முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அனைத்து நாடுகளும் முதலீடு செய்தால் இந்தியா உலகின் இரண்டாம் பெரிய சக்தி நாடாக மாறுவது உறுதி என்று. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்  கூறினார்.

Sep 19, 2025

இளையராஜா பாடியதால் இயற்கை பாவம் இருந்தது .

"தாய்மூகாம்பிகை" திரைப்படத்தில் ஒலித்தது தான் "ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ என்கின்ற பாடலை கேட்டு ,உண்மையில்  கண் கலங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த பாடல். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், இளையராஜாவின் இசையும் அவருடைய குரலும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல. "ராஜாவின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது. தாய் மூகாம்பிகை படத்தில் உள்ள ஜனனி ஜனனி என்கிற பக்தி பாடலை வேறு யாரு வேண்டுமானாலும் பாடியிருக்கலாம், அது அருமையாக தான் இருந்து இருக்கும். ஆனால் ராஜா பாடியதால் தான் அதில் ஒரு விதமான இயற்கை பாவம் இருந்தது ,என்று அதை பற்றி கவிஞர் வாலி பேசுகையில், கூறினார்.

Sep 18, 2025

வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், உணவு விடுதிகளிலும் பயன்படுத்தும் "பெப்பர் ரோபோ ".-

“பெப்பர்ரோபோ”ஜப்பானில் சாப்ட்வங்கிஉருவாக்கியஇயந்திரமனிதன். ரோபோக்கள்படிப்புக்கு, வீட்டுக்கு, வணிகத்துக்கு, என்று மூன்று வகையாக இருக் கின்றன. இவை மனிதர்களின் முகபாவனையில் இருந்து உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன. இந்த ரோபோவை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் விற்பனை ஆகும்  “பெப்பர் ரோபோ.”  

Sep 18, 2025

ஓர்க்கா திமிங்கிலம் மனிதர்களிடமிருந்து நாகரிகத்தையும், புது விஷயங்க ளையும் கற்பதற்காகவே, உணவை பகிரும் 

 ஓர்க்கா திமிங்கிலம் உலகின்  மிகப்பெரிய திமிங்கலங்களுள்   ஒன்று. நார்வே. அன்டார்டிகா. அலாஸ்கா ஆகிய குளிர்ப் பிரதேசங்களைஒட்டியகடல்களில்அதிகமாகஇருக்கும்.இவைஉலகம்முழுவதும்வாழ்கின்றன.இவை மிகவும்புத்திசாலிகள்.கூட்டமாக வேட்டையாடித் தங்களுக்குள் உணவைப்பகிர்ந்துஉண்ணும்.இவைமனிதர்களுடன்உணவைப்பகிர்ந்து கொள்வது வீடியோக்களில் பதிவாகி உள்ளது.மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களில் ஓர்க்காவும் ஒன்று,  இவை தாங்கள் வேட்டையாடிய  உணவை ஆய்வுக்குச் செல்லும் மனிதர்களிடம்பழகுவதற்காக அவர்களுக்குத் தருகின்றன. மனிதர்கள் அதை ஏற்கிறார்களா, மறுக்கிறார்களா என்று கவனிக்கின்றன. மனிதர்களின் எதிர்வினையை இவை மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றன.படகுகளில் செல்பவர்கள், கரையில் இருப்பவர்களிடம் கூட, சில நேரங்களில் இவை உணவைப் பகிர முற்படுகின்றன. உலகில் வாழும் உயிரினங்களில் இவை இரண்டாவது பெரிய மூளையை உடையவை.  ஆய்வாளர்கள் மனிதர்களிடமிருந்து நாகரிகத்தையும், புது விஷயங்க ளையும் கற்பதற்காகவே, இவை பழக முற்படுகின்றன என்று கூறுகிறார்கள்.

Sep 17, 2025

 35.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊர்வன உயிரியின் தொல்லெச்சத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

இதுவரை கிடைத்த தொல்லெச்சங்களைக் கொண்டு, முதன்முதலில் ஊர்வன உயிரிகள் தோன்றியது .32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஓர் ஊர்வன உயிரியின் தொல்லெச்சத்தைக் கண்டெடுத்துள்ளனர். இது 35.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது.

Sep 17, 2025

கீடோ டயட் உணவு முறையால் இதயம் பாதிக்கப்படாது.

மாவுச்சத்தை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக புரதத்தையும் கொழுப்பையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் உணவு முறைக்குப் பெயர் கீடோ டயட் .இதனால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்த உணவு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோயை உருவாக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த யூ.சி.எல்.ஏ., மருத்துவ ஆய்வு மையம் இந்த உணவு முறையால் இதயம் பாதிக்கப்படாது என்று கண்டறிந்துள்ளது.

Sep 17, 2025

2024 YR4 எனும் விண்கல்

 வருகின்ற 2032ம் ஆண்டு 2024 YR4 எனும் விண்கல் பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியி ருந்தனர். ஆனால் இதன் இப்போதைய பாதை மாறி வருகிறது. இதனால்,இது பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

Sep 16, 2025

“அமைதி நினைவுப்பூங்கா' ஜப்பான் நாட்டின்  ஹிரோஷிமா நகரில்….'

 1945-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின்  ஹிரோஷிமா நகரம் மீது வீசப்பட்ட, அணு குண்டு தாக்குதலின் கோரம் எப்படி இருக்கும் என்புகுற்கு சாட்சியாக . ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சு பாதிப்புக்கு உள்ளான இடங்கள் 'அமைதி நினைவுப்பூங்கா' என்ற பெயர் சூட்டப்பட்டு, பூங்காவின் வடக்குப் பகுதியில் அணு குண்டு தாக்கிய ஒரு கட்டிடத்தின் உள்ள 'ஏ-பாம்ப் டோம்' என்று அழைக் கப்படும் எஞ்சியிருக்கும் குவிமாடம் வேலி அமைத்து பாதுகாக் கப்பட்டு வருகிறது. ஹிரோஷிமாவின் சில பகுதிகள், போர் அச்சறுத்தல் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு எச்சரிக்கையை தரும் அருங்காட்சியகமாக இந்த நகரம் மாற் றப்பட்டு உள்ளது. 1996-ம் ஆண்டு முதல், இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது. ஹிரோஷிமாவின் ஏ-பாம்ப் டோம் குவிமாடம் மற்றும் இந்த பூங்காவை பார்வையிட ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். ஆனால், இந்த குவிமாடம் அருகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஹிரோஷிமா நகரை கடந்து செல்லும் மோட் போயாசு ஆற்றின் பின்னணியில் காணப்படும் ஏ-பாம்ப் டோம் குவிமாடத்தை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணுகுண்டு வீச்சால் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனவே அதன் நினைவானது வலிமிகுந்ததாக இருப்பதால், இதனை அகற்ற வேண்டும் என்று சிலர் கூறினாலும், அணுஆயுதங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை மக்களுக்கு உணர வைக்கும் என்ப தால், இது எப்போதும் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று உலக அளவில் கருதப்படுகிறது.

1 2 ... 91 92 93 94 95 96 97 ... 136 137

AD's



More News