25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


வெள்ளை வயிற்று வால்  காகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெள்ளை வயிற்று வால்  காகம்.

காகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ,தென்னிந்தியாவின் காடுகளில் காணப்படும் வெள்ளை வயிற்று வால் காகம். இவை சில பகுதிகளில் வால் காக்கையுடன் ஒன்றாகக் காணப்படும். ஆனால் இவற்றின் தோற்றம் மற்றும் ஒலி வேறுபட்டு இருக்கும்.

இதன் தலைப்பகுதி கருப்பாகவும், சிறகுகள் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் கலந்தும் காணப் படும். வயிற்றுப் பகுதியில் மட்டும் பஞ்சு போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனால் இது வெள்ளை வயிற்று வால் காகம் என அழைக்கப்படுகிறது. பழங்கள், விதைகள், பூச்சிகள், வண்டுகள், சிறிய பறவைகள் போன்றவைகளை உணவாக உட்கொள்ளும். இதுவும் காகத்தைப்போல பல பறவைகளை கூப்பிட்டுச் சாப்பிடும் பழக்கம் கொண்டது.

25 செ.மீ.முதல்30 செ.மீ. வரை நீளமுடையது. மூன்று முட்டைகள் வரை இடும். இதன் முட்டைகள் சாம்பல் நிறத்திலும் வெளிர் பச்சை நிறம் கலந்தும் இருக்கும்.இவை தமிழ்நாட்டில் தென்காசி, மதுரை,நீலகிரி, சேலம் போன்ற இடங்களில் உள்ள பசுமை வளமிக்கப் பகுதிகள், தோட்டங்கள், விவசாய நிலங்கள், மரம் மிகுந்த பகுதிகளில் காணப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News