தைபே ஓபன் பாட்மின்டன்: இந்திய வீரர்கள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!
சீன தைபேயில் நடைபெறும் சூப்பர் 300 தைபே ஓபன் பாட்மின்டன் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட்களில் பெய் யு வாஙை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும், அன்மோல் கார்ப், தான்யா, தான்வி சர்மா ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரனாய், ஜப்பானின் மினோரு கோகாவை 21-11, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply