பனிக் கடல் யானை.
கடல் பாலூட்டிகளில், பனிக் கடல் யானை. துடுப்புகாலி இனத்திலேயே பெரியதான இது தந்தம் போன்ற நீண்ட பற்களைக் கொண்டுள்ளது. இவை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வட துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் நிறைந்த இடங்களில் காணப்படுகின்றன.
பின்னங் கால்களால் நீந்தும் ஆற்றல் கொண்டவை. உட்பொதிந்த காதுகள் உண்டு. துடுப்புகள் போன்ற கால்களால் தரையிலும் தவழ்ந்து செல்லும், தடிமனான தோல் கொண்டிருப்பதால் கடும் குளிர், பனி சூழல்களில் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது.
இந்த யானைகளின் தொண்டையின் அடியில் பெரிய காற்றுப்பைகள் உள்ளது. எதிரிகளை துரத்தி அடிப்பதற்கு இதன் நீண்ட தந்தம் போன்ற பற்கள் ,பனிக்கட்டிகளை துளையிட்டு கடலில் இறங்கவும், கடலில் இருந்து பனிக்கட்டிகளின் மேல் ஏறுவதற்கும் பயன்படுகிறது. இதன் பற்கள் 15 ஆண்டுகள் வரை வளரக்" கூடியது. இந்த பற்கள் மூலம் பனிக்கரடி மற்றும் திமிங்கலத்திடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறது.
0
Leave a Reply