25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Mar 18, 2026

முலாம்பழம் நீர் தன்மை மிகுந்த  பழங்களில் முக்கியமானது 

நீர் தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு அதில் முக்கியமானது முலாம்பழம்.உடலுக்கு குளிர்ச்சி , உடனடிப் புத்துணர்ச்சி தருவதில் முலாம் பழம் பெரிதும் பயன்படும்.மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.முலாம் பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை இதற்கு முலாம் பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.புரதம், சர்க்கரை சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ.சி. என்று பலவித சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

Mar 16, 2026

சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்.

கிழங்கு வகைகள்-உருளைக்கிழங்கு சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு.இறைச்சி -ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு.எண்ணெய் வகைகள்-தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றில் சமைத்த திண்பண்டங்கள் மற்றும் உணவுகள்,பலகாரங்கள்-இனிப்பு பலகாரங்கள். சீப்ஸ், வடை முறுக்கு பூரி சமோசா போன்ற எண்ணெயில் பொரித்தவை.பால் வகைகள்-எருமை பால் வெண்ணெய், வனஸ்பதி.கஞ்சி வெள்ளை பிரெட் ப்ரைடு ரைஸ் ஃப்ரைடு நூடுலஸ் இலை அனைத்தும் அதிக ஆபத்தை விளைவிக்கும்.

Mar 14, 2026

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், ஜாயிண்ட் பெயின், நீர்க்கட்டு குணமாக....

சாமை அரிசி, கம்பு, மூங்கில் அரிசி ,கருப்பு உளுந்து,கருப்பு கவுனி, சிகப்பு கவுனி அரிசி.தனித்தனியாக பொன் நிறத்தில் வறுத்து பவுடர் பண்ணி வைக்கவும்.சாப்பிடும் அளவுக்கு கஞ்சி போல் காய்ச்சி சாப்பிடவும்.ஜாயிண்ட் பெயின், நீர்க்கட்டு, தசை இறுகி பையின் குறையும்.ரெண்டு ஸ்பூன் போட்டு தண்ணி போல் காட்சி டீ காபி போல் சாப்பிடலாம் நேரம் கிடையாது.நீரகட்டு குறைந்து தசை இறுகி,ஜாயிண்ட் பெயின் குறையும்.

Mar 13, 2026

சர்க்கரை கட்டுக்குள் வர மூக்கிரட்டை கீரை.

 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த வரபிரசாதம்.டயாலிசிஸ் வரை சென்றவர்கள் கூட இந்த மூக்கிரட்டையை மூன்று மாதம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டாலே போதும். டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை கட்டுக்குள் வரும். பூரண நலத்துடன் வாழலாம்.

Mar 12, 2026

கிட்னி கல் கரைய....

ஒரு இளநீர், நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன், பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் ,சீரகம் ஒரு ஸ்பூன்,இளநீர் மூடி தொறந்து ,மூன்றும் சேர்த்து நைட்டு முழுவதும் வைத்து காலையில் சாப்பிடலாம்.11 நாள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.11 நாள் முடிஞ்சு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட வேண்டும்.கிட்னி கல் குறைந்துவிடும். சிறுநீரக கற்கள் உருவாக பல காரணங்கள் உள்ளன. நீரிழப்பு  பொதுவான காரணியாகும். தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. 

Mar 11, 2026

உடல் சூட்டை தணிக்கும் உளுந்து பால்.

உளுந்து1/4 டம்ளர் எடுத்து கொள்ளவும். அதை கழுவி விட்டு குக்கரில் போட்டு11/2தண்ணீர் விட்டு வேக வைத்து அரைத்து கொள்ளவும்.பிறகு கொஞ்சம் தண்ணர் சேர்த்து, தேங்காய்பால்/ பால் விட்டு நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான உளுந்து பால் ரெடி".இதனை குடித்து வருவதனால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், மாதவிடாய், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் நீங்க உதவியாக இருக்கும்.

Mar 10, 2026

இதயம் பலம் பெற செம்பருத்தி பூ.

செம்பருத்தி பூவை வெயில் காய வைத்து அதை பொடி ஆக்கி பாலில் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெரும்.செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.செம்பருத்தி பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து10 செம்பருத்தி பூக்களை போட்டு மூடி அடுப்பை அணைத்து விடவும், செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் வடிகட்டி அதனுடன்1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் இதயத்தை பலப்படுத்தும்.

Mar 09, 2026

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள  வேண்டியவை .....

சக்கரை நோயாளிகளுக்கு,வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பிஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது. நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். பேரிச்சம்பழம்,கொய்யா காய், பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது.

Mar 07, 2026

சத்துணவு குறைபாட்டின் அறிகுறிகள்.

கால் பிடிப்பு ( leg cramps):மெக்னீசியம்  குறைபாடு.பசியின்மை (No Appetite): துத்தநாகம் (Zinc )குறைபாடு.உலர்ந்த கண்கள் மற்றும் வாய் (Dry Eyes & Mouth): வைட்டமின் A குறைபாடு.நாள் முழுவதும் சோர்வு (Tired All Day) வைட்டமின் D குறைபாடு.முடி உதிர்தல் (Hair Falling Out): இரும்புச்சத்து குறைபாடு,மனநிலை சோகமாக இருத்தல் (Feeling Low): வைட்டமின் B6 குறைபாடு.கைகள் மரத்துப்போதல் (Numb Hands: வைட்டமின் B12 குறைபாடு.உலர்ந்த அல்லது அரிப்புள்ள தோல் (Dryitchy Skin): வைட்டமின் E குறைபாடு.இனிப்பு உணவுகள் மீது ஏக்கம் (Sugar Cravings): மெக்னீசியம் குறைபாடு.குளிர்ச்சியான கைகள் மற்றும் மூச்சுத் திணறல். ( Cold Hands & Short of Breath): இரும்புச்சத்துகுறைபாடு.ஈறுகளில் ரத்தம் வடிதல்  (Bleeding gums) வைட்டமின் C குறைபாடு.குழப்பமான மனநிலை (Foggy Mind): வைட்டமின்B12 குறைபாடு. 

Mar 06, 2026

ஞாபக சக்தியை அதிகரிக்கும் கருந்துளசி.

சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும். தொற்றுநோய்களை எதிர்க்கும்.சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்.வயிற்றுப் பொருமலைத் தணிக்கும் .ஞாபக சக்தியை அதிகரிக்கும்.வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு.இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.

1 2 ... 8 9 10 11 12 13 14 ... 51 52

AD's



More News