25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முடவாட்டுக்கால் கிழங்கு..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முடவாட்டுக்கால் கிழங்கு..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதியை தரும் முடக்குவாத பிரச்சனைக்கும், மூட்டு வலி பிரச்சனைக்கும் தீர்வாக இருப்பது முடக்குவாத கிழங்குதான்.. முடக்குவாதத்தினை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தீர்வு காணாவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். சர்க்கரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம் கட்டுக்குள் இருக்கும். அதேபோல, இதில் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து குடிக்கலாம். ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் உள்ளன. எலும்பு அடர்த்தி: முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மிகக்சிறந்த மருந்தாகும். எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோய்களுக்கும் இந்த கிழங்குகள் மருந்தாகின்றன.. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.. இந்த கிழங்குக்கு உண்டு. எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் போக்கிவிடுவதுடன், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.

கருப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக முடவாட்டுக்கால் கிழங்கு உதவுகிறது.. பெரும்பாலும் இந்த கிழங்கை, தோல் சீவி கழுவி, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து போட்டு, சூப் போல வைத்து குடிப்பார்கள்... முடவன் ஆட்டுக்கால் கிழங்கின் மீதுள்ள தோல் மற்றும் முடிகளை நீக்கிவிட்டு, உள்ளே மஞ்சள் கலரில் கிழங்கினை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.. பிறகு கிழங்கினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுகளைகொட்டி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் முடவாட்டுக்கால் சூப் ரெடி.


இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் சேர்த்து பேஸ்ட்போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், லவங்கப்பட்டை, சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து வைக்கப்பட்ட முடவாட்டுக்காலையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. நன்றாக கொதித்தபிறகு, கடைசியாக பூண்டு, உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சூப் ரெடி. முடவாட்டுக்கால் கிழங்கில் சாறு போல தயாரித்து குடிக்கலாம்.. அதாவது, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், என அனைத்தையும் வதக்கி கொள்ள வேண்டும். பிறகு அதிலேயே சுத்தம் செய்து பொடிபொடியாக நறுக்கப்பட்ட கிழங்கையும் போட்டு வதக்க வேண்டும்.. பிறகு, சோம்பு, பட்டை, சேர்த்து, வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மொத்தமாக அரைத்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு ஊற்றி இந்த விழுதை கொதிக்க வைத்து இறக்கி, சுடுசோறில் பிசைந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கும் இந்த சூப்பை குடிக்க தரலாம்.. மூட்டுவலியை தவிர, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இந்த சூப் நல்லது. 15 நாட்களுக்கு இந்த சூப் குடித்துவரும்போது நல்ல பலன் கிடைக்குமாம். ஆனால், இந்த சூப்பை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தான் குடிக்க வேண்டும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News